Chandra Grahanam 2025: இன்று சந்திர கிரகணத்தின் போது செய்ய கூடாத விஷயங்கள் மற்றும் செய்ய வேண்டியவை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
1/6இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்று செப்டம்பர் 7 அன்று நிகழ்கிறது. வானில் நிகழும் இந்த அரிய நிகழ்வின் போது, சில பாரம்பரிய நடைமுறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவது அவசியமென ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது.
2/6கிரகணத்தின் போது உணவு அல்லது தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கிய ஐதீகமாகும். இந்த நேரத்தில், பூமியின் மீது விழும் கிரகணத்தின் கதிர்வீச்சு, உணவை எளிதில் நஞ்சாக்கி, அதன் இயல்பு தன்மையை மாற்றிவிடும் என்று நம்பப்படுகிறது.
3/6கிரகணம் தொடங்குவதற்கு முன்பு, சமைத்த உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றில் துளசி இலைகள் அல்லது அருகம்புல் போட்டு வைப்பது ஒரு முக்கியமான சடங்காக பின்பற்றப்படுகிறது.
4/6கிரகணம் முடிந்தவுடன், குளிப்பது மிகவும் அவசியமாகும். இது, கிரகணத்தின் தாக்கத்திலிருந்து உடலையும், மனதையும் தூய்மைப்படுத்த உதவும் என்று கருதப்படுகிறது.
5/6இந்த மரபுகள், அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளாகும்.
6/6சந்திர கிரகணம் இன்று இரவு 9:56 மணிக்கு தொடங்கி, இரவு 1:26 மணிக்கு முடிவடைய உள்ளது. இன்று மட்டும் நிலவு சற்று வித்தியாசமான நிறத்தில் காணப்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.