M-UTS Scheme In Chennai Central Railway Station: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம், ரயில் டிக்கெட்டுகளை இனி வரிசையில் நின்று வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. அது பற்றி விரிவாக இங்கு பார்ப்போம்.
1/7நாட்டில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. விரைவு ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அதே நேரத்தில், பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
2/7பயணிகள் சுலபமாக டிக்கெட் எடுப்பதற்கு பல்வேறு புதிய திட்டங்களை ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, எம்-யூடிஎஸ் சஹாயக் என்ற பெயரில் இந்த புதிய திட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு வரிசையில் காத்திருக்க தேவையில்லை.
3/7இந்த புதிய திட்டம் மூலம் முன்பதிவில்லாத ரயில்களுக்கு டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். ரயில் புறப்படுவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் கொடுக்கப்படும். இதனால், ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அதிமாகவே இருக்கும். இந்த கூட்டத்தை தவிர்க்கும் நோக்கில், ரயில்வே நிர்வாகம் எம்-யூடிஎஸ் சஹாயக் என்ற பெயரில் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
4/7இந்த எம்-யூடிஎஸ் சாதனம் மற்றும் அச்சுப்பொறியை பயன்படுத்தி, M-UTS Assistant என்பவர் டிக்கெட்டுகளை பயணிக்கு எடுத்து கொடுப்பார். இவர் ரயில்வேயால் பணியமர்த்தப்பட்ட ஒருவர். இவர் தான், எம் யூடிஎஸ் சாதனம் மூலம் முன்பதிவில்லா ரயில்களுக்கு டிக்கெட்டுகளை எடுத்து கொடுப்பார். ஆனால், இந்த சாதனம் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளையோ அல்லது சலுகை அடிப்படையிலான டிக்கெட்டுகளை பெற முடியாது.
5/7இந்த திட்டம் மூலம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர்களில் நெரிசலை குறைக்கும். மேலும் பயணிகள் வரிசையில் காத்திருக்க தேவையில்லை. பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் பயணிகளுக்கு இது பெரிதும் உதவும். இந்த எம் யூடிஎஸ் திட்டம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய மெட்ரோ நகரங்களில் உள்ள ரயில் நிலையத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அனைத்து ரயில் நிலையங்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
6/7சமீபத்தில் கூட, இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. குறிப்பாக, லோயர் பெர்த் தொடர்பாக அதிரடி ரூல்ஸை விதித்தது. ரயில்களில் லோயர் மற்றும் மீடில் பெர்த்தில் இருப்பவர்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும். மற்ற நேரங்களில் அமரும் வசதி மட்டுமே கிடைக்கும் என ரயில்வே தெரிவித்து இருந்தது.
7/7அதே நேரத்தில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சைட் அப்பர் பெர்த்தில் உள்ள பயணிகள், கீழ் பெர்த் படுக்கையை உரிமை கோர முடியாது. அவர்கள் இரவு 10 மணிக்கு முன்பு, காலை 6 மணிக்கு பின்பு தான், சைட் லோயர் பெர்த்தில் அமர முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதன் மூலம், ரயில்களில் தூங்கும் நேரத்தை ரயில்வே விளக்கி உள்ளது.