ஆளே மாறிப்போன பிரபல நடிகர் ஸ்ரீ! இதுதான் காரணமா? அவரே போட்டிருக்கும் பதிவு..

Actor Sri Current Condition Viral Photos : பிரபல நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை தற்போது இன்ஸ்டாவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Actor Sri Current Condition Viral Photos :  சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் ஸ்ரீ. இவர், கடந்த சில நாட்களாக வெளியிட்டு வரும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவருக்கு என்ன ஆனது என்று பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். 

1 /7

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளில் கவனம் ஈர்த்த படங்களில் நடித்தவர், நடிகர் ஸ்ரீ. இவர், முதன் முதலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது, வழக்கு எண் 18/9 என்ற படத்தில்தான். 

2 /7

வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும், அழுத்தமான கதைகளாக தேர்ந்தெடுத்து, அதன் முலம் தான் நடித்த கதாப்பாத்திரங்களை பிறர் மனதில் பதிய வைத்தவர், ஸ்ரீ. இவரது முழுப்பெயர், ஸ்ரீராம் நடராஜன்.

3 /7

நடிகர் ஸ்ரீ-யை இன்னும் பிரபலப்படுத்திய படம், மாநகரம். இது, இப்போது டாப் இயக்குநராக இருக்கும் லோகேஷ் கனகராஜ்ஜின் முதல் படமாகும்.

4 /7

ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு, சோன் பப்படி உள்ளிட்ட படங்களில் நடித்து, மாநகரம் படத்தில் நடித்து முடித்த பிறகு இவருக்கு பெரிதும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இறுதியில், 5 வருட இடைவேளைக்கு பிறகு இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்தார்.

5 /7

இறுகப்பற்று படத்திற்கு பிறகு, ஸ்ரீ வேறு எந்த திரைப்படத்திலும் ஸ்ரீ-ஐ பார்க்க முடியவில்லை. இவரை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. இந்த நிலையில், இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

6 /7

படங்களில் பார்க்க, பெரிய ஹீரோவாக தெரிந்த இவர் ரியல் வாழ்க்கையில் பார்ப்பதற்கு ஒல்லியான தேகத்துடன் ஆளே மாறிப்போய் இருக்கிறார். இதற்கான காரணம், இதுவாக இருக்குமோ என்ற மாதிரியான ஒரு போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

7 /7

ஸ்ரீ, கடைசியாக நடித்த இறுகப்பற்று படத்திற்கு மேமண்ட் வரவில்லை என சில வாரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். வில் அம்பு படத்திற்கும் இவருக்கு அதே போல்தான் நடந்ததாம். ஒரு வேலை, இவர் நடித்த பல படங்களுக்கு பேமண்ட் வராததுதான் இவரது இந்த நிலைக்கு காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சில செலிப்ரிட்டிகளை டேக் செய்து இவருக்கு உதவுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.