மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுக்கு முன் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?

Written ByYuvashree
Published: Sep 09, 2025, 01:58 PM IST|Updated: Sep 09, 2025, 01:58 PM IST

Madharaasi Hero First Choice Not Sivakarthikeyan : சிவகார்த்திகேய்ன் ஹீரோவாக நடித்திருந்த மதராஸி திரைப்படம். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இதில், முதன்முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?

Madharaasi Hero First Choice Not Sivakarthikeyan : சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம், மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஆனால், ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்திய நேர்காணலில் தான் தேர்வு செய்த முதல் ஹீரோ இவரில்லை என்று தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரம், இதோ.

Madharaasi 1/7

மதராஸி

சமீபத்தில் வெளியான படம், மதராஸி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Madharaasi Villian2/7

மதராஸி வில்லன்

துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து தமிழில் அறிமுகமான வித்யூத் ஜாம்வால், மதராஸி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இவரது நடிப்புக்கு பலர் மத்தியில் பாராட்டை பெற்றது.

Audience Response3/7

நல்ல வரவேற்பு

மதராஸி திரைப்படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகின்றனர். படம், இரண்டு நாட்களில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்தது. தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல முன்னேற்றத்தை பெற்று வருகிறது.

SK4/7

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், கடந்த சில வருடங்களாகவே மாவீரன், அமரன் உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். மதராஸி படத்திலும், மன நோய் இருக்கும் கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார்.

Positive Negative5/7

பாசிடிவ்நெகடிவ்

இப்படத்தை பொறுத்தவரை, முதல் பாதி கொஞ்சம் நீளமாக இருப்பது பொறுமையை சோதிப்பதாகவும், இரண்டாம் பாதியில் இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் தரமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

AR Murugadoss6/7

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ், மதராஸி திரைப்படத்தில் நடிக்க தேர்ந்தெடுத்த கதாநாயகர் யார் தெரியுமா? அவர் இந்தியாவிலேயே பெரிய நடிகர்.

First Choice7/7

முதல் தேர்வு

ஷாருக்கானிடம்தான், மதராஸி படத்தின் கதையை எடுத்துக்கொண்டு சென்றாராம். அப்போது அவரும் ஓகே சொல்லி விட்டாராம். ஆனால், ரொம்ப காலம் படம் ஆரம்பிக்க எடுத்துக்கொண்டதால் அது நடக்கவில்லை. எனவே, சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லவே, கதை ஓகே ஆகியிருக்கிறது.