தனுஷுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்.. யார் தெரியுமா?

நடிகர் தனுஷுக்கு மலையாளர் நடிகர் வில்லனாக நடிக்க உள்ள நிலையில், அவர் யார் என்பதை பார்க்கலாம்.

நடிகர் தனுஷின் 55வது படத்தை 'அமரன்' படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். 

1 /5

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் அவ்வபோது படங்களையும் இயக்கி வருகிறார். 

2 /5

அப்படி இவரது இயக்கத்தில் பவர்பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேள் என்னடி கோபம் ஆகிய படங்கள் வெளியானது. தற்போது அவர் இட்லி கடை படத்தை இயக்கி உள்ளார். அப்படத்தில் அவரே நடித்தும் இருக்கிறார். 

3 /5

இப்படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அதில் இருந்து பின் வாங்கினர். தற்போது அந்த படம் எப்போது வெளியாகிறது என்ற தேதி இன்னும் தெரிவிக்கப்படவில்லை. 

4 /5

இந்த நிலையில், நடிகர் தனுஷ் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இயக்குநர் விக்னேஷ் ராஜா போர் தொழில் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

5 /5

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அர்ஜுன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.