Actress Abhinaya: பிரபல மலையாள நடிகை அபிநயாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பலரும் அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
காது மற்றும் வாய் பேச முடியவில்லை என்றாலும், தனது திறமையால் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை அபிநயா.
தமிழில் நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து பல்வேறு ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான பனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இளம் ரசிகர்கள் மனதிலும் இடத்தை தக்க வைத்துள்ளார்.
அடுத்ததாக தமிழில் மூக்குத்தி அம்மன் 2ல் நடிக்க உள்ளார். மேலும் பல்வேறு படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக திடீரென அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது அனைவருக்கும் ஷாக்கிங் நியூஸாக உள்ளது.
இவரும் விஷாலும் நீண்ட நாட்களாக உறவில் இருக்கிறார்கள் என்று வதந்திகள் பரவிய நிலையில், கை மட்டும் தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அபிநயா. இதனால் மாப்பிள்ளை யார் என்று தெரியாமல் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.