தமிழ்நாட்டில் அதிக வசூல் பெற்ற மலையாள படங்கள்! முழு லிஸ்ட் இதோ..

Published: Sep 04, 2025, 12:02 PM IST|Updated: Sep 04, 2025, 12:02 PM IST

Malayalam Films Hit In Tamil Nadu : சில மலையாள திரைப்படங்கள், தமிழ்நாட்டில் பெரிய ஹிட் அடித்துள்ளது. அந்த படங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!

Manjummel Boys1/7

கேரளாவை தாண்டி, தமிழ்நாட்டில் பல நாட்கள் தியேட்டர்களில் ஓடிய படம், மஞ்சுமெல் பாய்ஸ். சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், கடந்த ஆண்டு வெளியானது. உலகளவில் 241 கோடிக்கும் மேல் வசூலித்தது. தமிழகத்தில் மட்டும் 65 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. 

Aavesham2/7

பகத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம், ஆவேஷம். இந்த படத்தை ஜீத்து மாதவன் இயக்கியிருந்தார். இப்படம் உலகளவில் ரூ.156 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 10 கோடிக்கும் மேல் வசூலித்தது. 

Premalu 3/7

இந்திய அளவில் பலரது கவனத்தை ஈர்த்த மலையாள படம், பிரேமலு. இந்த படத்தில் மமிதா பைஜு, நஸ்லேன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இப்படம், தமிழகத்தில் மட்டும் 10.75 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. 

L2 Empuraan4/7

லூசிஃபர் படத்தின் 2ஆம் பாகமாக வெளியான படம் எம்புரான். இப்படத்தில் மோகன் லால், பிருத்விராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது, உலகளவில் ரூ.268 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. 

Aadujeevitham5/7

பிருத்விராஜ் நடித்திருந்த படம், ஆடுஜீவிதம். இப்படம், இந்திய அளவில் ரூ.85 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. தமிழில் மட்டும் ரூ.8.20 கோடி வசூலித்ததாக தரவு சொல்கிறத்ஹு. 

Lokah Chapter 16/7

கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், லோகா சேப்டர் 1. இதில் நஸ்லேன் நடித்திருந்தார். துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்த படம், சமீபத்தில் ரூ.100 கோடியை பாக்ஸ் ஆபிஸில் தாண்டியது. தமிழகத்தில் ரூ.6 கோடி வசூலை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது.

ஹிரிதயப்பூர்வம்7/7

லோகா படத்துடன் போட்டி போட்ட படம், ஹிரிதயப்பூர்வம். இதில் மோகன்லால், மாளவிகா மோகனன், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படமும் நல்ல வசூலை பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் என்ன வசூல் என்பது குறித்த தரவுகள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.20 கோடி வசூலை உலகளவில் இப்படம் நெருங்கி வருவதாக கூறப்படுகிறது.