டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, உடலுறவுக்கான ஆசையை தூண்டுகிறது. ஆண்களின் முகத்தில் வளரும் தாடி, மீசை, மார்பில் உள்ள முடி போன்ற வளரவும் இது தான் காரணம்.
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு என்னும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவருக்கு விந்தணு உற்பத்தி மற்றும் தரம் பாதிக்கப்படுவதோடு, உடலுறவுக்கான நாட்டமும் குறைகிறது. எலும்புகளும் பலவீனம் அடையும்.
ஆண்களின் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்பட டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு முக்கிய காரணமாகிறது. இதன் காரணமாக திருமண வாழ்க்கையில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துவதோடு, விந்தணு உற்பத்தி மற்றும் தரம் பாதிக்கப்பட்டு, தந்தையாக வேண்டும் என கனவும் பொய்த்து போகும்.
அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதால், ஆண்களின் விந்தணுவின் தரம் பாதிக்கப்படும். சில நேரங்களில் விலங்குகளுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க ஸ்டெராய்டுகள் கொடுக்கப்படுவது இதற்கு காரணம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி அனைத்து வகையிலும் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது. விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் பாதிக்கப்படாமல் இருக்க, பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தினசரி உணவில் சேர்ப்பதைக் தவிர்க்கவும்.
சோயா உணவுகளில், பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அதிகம் உள்ளதால், உடலின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும் என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமானது என்றாலும், அளவிற்கு அதிகமான சோயா உட்கொள்வதால் விந்தணு குறையக்கூடும் என்பது ஆய்விலும் தெரிய வந்துள்ளது.
ஆளி விதையில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன.இருப்பினும், ஆளி விதையில் லிக்னான்கள் அதிகமாக உள்ளதால் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்: அளவிற்கு அதிகமான சிகரெட் மற்றும் மது டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இதனால், விந்தணு எண்ணிக்கை குறைந்து பாலியல் ஆரோக்கியம் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.