Manjummel Boys: கடந்த 2024ஆம் ஆண்டு மஞ்சுமல் பாய்ஸ் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது.
Manjummel Boys Director Chidambaram Sexual Harassment Case: மஞ்சுமல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் மற்றும் மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான படம் மஞ்சுமல் பாய்ஸ். இப்படம் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியானது.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுத்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 242 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த 2022ஆம் ஆண்டில் கொச்சியில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் இயக்குநர் சிதம்பரம் அத்துமீறி நுழைந்து பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சிதம்பரம் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 354ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சிதம்பரம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், புகார்தாரரின் விரிவான வாக்குமூலத்தை பெற்ற பின்னரே இந்த வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார். மேலும், இவ்வழக்கின் விசாரணைக்கு ஆஜராகுமாறு இயக்குநர் சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான செளபின் ஷாஹிர் நிதி மோசடி வழக்கில் கைதானது குறிப்பிடத்தக்கது.