Mars Transit: டிசம்பர் 7 ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் 5 ராசிகளுக்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sevvaai Peyarchi Palangal: கிரகங்களின் சேனாபதியாக கருதப்படும் செவ்வாய் டிசம்பர் 7 ஆம் தேதி தனுசு ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது டிசம்பர் மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சியால் அதிக பயனடையப் போகும் ராசிகள் எவை? அதை பற்றி இங்கே காணலாம்.
1/10அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
2/10செவ்வாய் தைரியம், வீரம், நிலம், வீடு, மனை, ஆற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருப்பவர். இவர் அனைத்து கிரகங்களின் சேனாபதியாக உள்ளார்.
3/10செவ்வாய் டிசம்பர் 7, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 7:26 மணிக்கு தனுசு ராசியில் பெயர்ச்சி ஆவார். செவ்வாய் பெயர்ச்சி டிசம்பர் மாதத்தின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
4/10தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். இவர்கள் வாழ்வில் செவ்வாயின் அருளால் வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அவர்களின் அதிர்ஷ்டம் உயரக்கூடும். மேலும் நிலம் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரக்கூடும். இந்த நான்கு அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதைக் காணலாம்.
5/10மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இது மிகவும் நல்ல நேரமாக இருக்கும். மேஷ ராசிக்காரர்களின் ஆளும் கிரகம் தனுசு ராசியில் சஞ்சரிப்பது அவர்களுக்கு பல நன்மைகளைத் தரும். செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு நிலம் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடும். குடும்பத்திலும் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
6/10மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி லாபத்திற்கான பல வழிகளைத் திறக்கும். நீண்டகால எதிரிகள் தோற்கடிக்கப்படலாம். தொழில் வாய்ப்புகள் உயரலாம். ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தில் அதிக அளவு லாபம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
7/10விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு, தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கத்தால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். திருமணத்திற்காக காத்திருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம். நிதி ஆதாயங்களும் வணிகத்தில் லாபமும் இருக்கலாம்
8/10தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். இந்த காலத்தில் முக்கிய இலக்குகளை அடைவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். உடல் ஆரோக்கியன் நன்றாக இருக்கும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். செவ்வாயின் அருளால் பெரிய வெற்றிகள் கிடைக்கும். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
9/10வாழ்நாள் முழுதும் துணிச்சலுடன் செயல்பட்டு, வீடு, மனை என சகல செல்வங்களுடனும் வாழ, "ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி தந்நோ பௌமஹ் ப்ரசோதயாத்" என்ற செவ்வாய் காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயனம் செய்யலாம்.
10/10பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.