புதன் பெயர்ச்சி: 7 ராசிகளுக்கு பொற்காலம்.... பணம், பதவி, புகழ் கிட்டும்

Published: Nov 11, 2025, 04:33 PM IST|Updated: Nov 11, 2025, 04:33 PM IST

Budhan Peyarchi Palangal: நவம்பர் 23 ஆம் தேதி புதன் பெயர்ச்சி நடக்கவுள்ளது. இதனால் 4 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம் ஆகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Mercury Transit: புதன் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், வணிகம், சாதுர்யம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். ஜாதகத்தில் புதன் நிலை சாதகமாக இருந்தால், அவர் புத்திசாலியாகவும், பேச்சாற்றல் நிறைந்தவராகவும் இருக்கிறார். புதன் நவம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார். புதன் பெயர்ச்சி பலன்களை இந்த பதிவில் காணலாம்.

Budhan Peyarchi Palangal1/10

புதன் பெயர்ச்சி பலன்கள்

நவம்பர் 23 ஆம் தேதி புதன் மேஷ ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகமான நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Aries2/10

மேஷம்

மேஷம்: நவம்பர் 23 ஆம் தேதி, புதன் துலாம் ராசியில் பெயர்ச்சி அடைவது மேஷ ராசிக்கு நன்மை பயக்கும். புதன் பெயர்ச்சி உறவுகளை வலுப்படுத்தும், அன்பையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் வணிக லாபத்தைத் தரும், மேலும் நிதி நிலையை மேம்படுத்தும். மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அற்புதமான வாய்ப்புகளை அமைத்துத் தரும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும்.

Gemini3/10

மிதுனம்

மிதுனம்: புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகளும் உள்ளன. அலுவலக பணிகளில் அதிக வெற்றி கிடைக்கும்.

 

Virgo4/10

கன்னி

கன்னி: நவம்பர் 23 ஆம் தேதி நிகழவுள்ள புதன் பெயர்ச்சி கன்னி ராசிக்கும் நன்மை பயக்கும். புதனின் சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்வில் இன்பத்தை அளிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலை வலுவடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

Libra5/10

துலாம்

துலாம்: துலாம் ராசியில்தான் புதன் பெயர்ச்சி ஆகவுள்ளார். புதன் துலாம் ராசிக்கு வருவது அதிக நன்மைகளை அளிக்கும். துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் சஞ்சாரம் அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேலும் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய அங்கீகாரம் கிடைக்கும்.

Sagittarius6/10

தனுசு

தனுசு: நவம்பர் 23 ஆம் தேதி, புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் பதினொன்றாவது வீட்டில் நடைபெறவுள்ளது. இது தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் வணிகத்தில் வெற்றியைத் தரும். திருமணத்திற்காக காத்திருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். புதிய வணிகத் திட்டங்கள் நன்மைகளைத் தரக்கூடும். மேலும் நண்பர்களிடமிருந்து உங்களுக்கு முழுமையான ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை வலுப்பெறும்.

Capricorn7/10

மகரம்

மகரம்: புதன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பன்மடங்கு அதிகரிக்கும். புதனின் சஞ்சாரம் மகர ராசியின் பத்தாவது வீட்டில் நடைபெறுகிறது. இது தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்ப உறவுகள் வலுப்பெறும்.

Aquarius8/10

கும்பம்

கும்பம்: நவம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியில் நடக்கவுள்ள புதன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். சிறு வணிகங்கள் குறிப்பிடத்தக்க லாபத்தைக் காணலாம். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கும். பழைய தகராறுகள் முடிவுக்கு வரலாம்.

Mercury Transit9/10

புதன் அருள் பெற

புத்திசாலித்தனம் அதிகரித்து, வாழ்வில் அனைத்து வசதிகளையும், அறிவாற்றலையும் பெற, 'ரௌகிணேயாய வித்மஹே சந்த்ர புத்ராய தீமஹி தந்நோ: ஸெளம்ய ப்ரசோதயாத்' என்ற புதன் காயத்ரி மந்திரத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.