நோயை விரட்டி அடிக்கும் ஜாதிக்காய்..இதை இப்படி பாலில் மட்டும் கலந்து குடிங்க..கம்பீரமா வாழ்ந்திடலாம்!

Health Benefits Of Nutmeg: மருத்துவர்களின் கூற்றுப்படி, ஜாதிக்காய் பொடியைப் பாலில் கலந்து குடிப்பது உடலுக்கும் மனதிற்கும் பல நன்மைகளை வழங்கும். இந்த பொடியைத் தினமும் இரவு நேரத்தில் பாலுடன் கலந்து குடித்தால் உடலுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 

Nutmeg Powder Mixed With Milk: ஜாதிக்காய் பொடியை நாம் இவ்வாறு பாலில் கலந்து குடித்தால், உடலும், மனமும் ஆரோக்கியமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பொடியை நீங்கள் இப்படி பாலில் கலந்து குடித்து வந்தால் உங்களுக்கு என்ன என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம். 

1 /8

நிம்மதியான தூக்கம்(Restful sleep): ஜாதிக்காயில் உள்ள இயற்கை சேர்மங்கள் நரம்புகளை ஓய்வு படுத்தி, நல்ல நிம்மதியான தூக்கத்தை ஏற்படுத்தும்.

2 /8

மன அழுத்தம் குறைதல்(Stress reduction): உடல் மற்றும் மனதைத் தெளிவாகவும் அமைதியாகவும் செய்யும் தன்மை ஜாதிக்காயில் உள்ளன. இதனால் மன அழுத்தம் குறையும்.

3 /8

சீரான செரிமானம்(Balanced digestion): ஜாதிக்காய் ஜீரணத்தை மேம்படுத்த உதவுகிறது, மேலும் இது வயிற்றுப் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.

4 /8

நோயெதிர்ப்பை பலப்படுத்துதல்(Strengthening immunity): இதில் ஆண்டி-ஆக்ஸிடன்கள் மற்றும் மூலிகைச் செரிமானக் கூறுகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன.

5 /8

முடி வளர்ச்சி(Hair growth): கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இது முடியின் ஆரோக்கியத்தைப் பலமடங்கு பாதுகாக்கிறது.

6 /8

மூளையின் செயல்பாடு ஊக்குவிப்பு(Brain function promotion): இது மனதில் புத்துணர்ச்சி அளித்து ஞாபக சக்தியை அதிகரித்து, கவனத்தை அதிகரிக்கச் செய்கிறது. 

7 /8

மூட்டுவலி மற்றும் அழற்சி குறைதல்(Reducing joint pain and swelling): அழற்சி எதிர்ப்பு (ஆண்டி-இன்ப்ளமேட்டரி) தன்மை பெற்றுள்ளதால், மூட்டு வலி மற்றும் தசைப்பிடிப்பு குறைய உதவுகிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.