இந்திய அணியில் இனி முகமது ஷமி கிடையாது - மறைமுக மெசேஜ் இதுதான்!

Written BySudharsan G
Published: Aug 04, 2026, 04:40 PM IST|Updated: Aug 04, 2026, 04:40 PM IST

Mohammed Shami : இந்திய அணியில் பும்ரா விலகிய நிலையில் அவருக்கு பதில் முகமது ஷமிக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆகிப் நபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், இந்திய அணியின் தேர்வுக்குழு முகமது ஷமிக்கு சொன்ன மறைமுக மெசேஜ் இதோ...

முகமது ஷமி1/5

முகமது ஷமி

ஜஸ்பிரித் பும்ரா இடது முழங்கால் காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரா 2வது டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதைத் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் கலக்கிய 29 வயதான ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி தேர்வு செய்யப்பட்டார்.

முகமது ஷமி2/5

முகமது ஷமி

ஆகிப் நபி தேர்வு செய்யப்பட்டது பாராட்டத்தக்கது என்றாலும்; இதன்மூலம் முகமது ஷமிக்கு இந்திய அணியில் இடமே இல்லையா...? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது. ஷமி கடைசியாக 2025ஆம் ஆண்டில்தான் ஓடிஐ மற்றும் டி20ஐ போட்டிகளில் விளையாடினார். 2023ஆம் ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் விளையாடவில்லை. 

முகமது ஷமி3/5

முகமது ஷமி

முகமது ஷமி தேர்வு செய்யப்படாதது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் முன்னர் ஒருமுறை விளக்கம் அளித்திருந்தார். கடந்தாண்டு நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி தேர்வு செய்யப்படாதது குறித்து அவர் கூறும்போது, டெஸ்ட் போட்டி விளையாடும் அளவிற்கு ஷமியின் உடற்தகுதி இல்லை என்றார்.

முகமது ஷமி4/5

முகமது ஷமி

ஆனால், அஜித் அகர்கர் இதை கூறிய பிறகு கடந்த 7 ரஞ்சி கோப்பை போட்டிகளில் 1,3 83 பந்துகளை வீசி, 37 விக்கெட்டை எடுத்துள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 16.72 ஆகும். இதில் மூன்று முறை 5-விக்கெட் ஹால், 50 ஓவர்கள் மெய்டன் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. மேலும் முதல் தர போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சான 8/90 என்பதை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம், ஆகிப் நபி கடந்த ரஞ்சி கோப்பையில் 60 விக்கெட்டை எடுத்தார், பந்துவீச்சு சராசரி 12.56 தான்.  அதுவும் ஜம்மு காஷ்மீர் முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.  இதனாலேயே ஷமிக்கு பதில் நபிக்கு தேர்வு செய்யப்பட்டார். 

முகமது ஷமி5/5

முகமது ஷமி

இதன்மூலம், உள்நாட்டு கிரிக்கெட்டில் மற்ற வேகப்பந்துவீச்சாளர்களை காட்டிலும் சிறப்பாக பந்துவீசிக் காட்டினால் மட்டுமே அவருக்கு இந்திய அணியில் இடம் என பிசிசிஐ மற்றும் அஜித் அகர்கர் மறைமுகமாக செய்தி சொல்லி இருப்பதாக புரிந்துகொள்ளலாம். எனவே, அடுத்து வரும் துலிப் டிராபி, ரஞ்சி டிராபி உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு தொடர்களிலும் ஷமி வெகு சிறப்பாக விளையாடினால் மட்டுமே டெஸ்ட் அணியிலும், 2027 ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெறுவார் என தெரிகிறது.