Planet Transits in June 2025: ஜூன் மாதத்தில் ஏற்படும் கிரக பெயர்ச்சிகளாலும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் சுப யோகங்களாலும், சில ராசிகளின் வாழ்க்கையில் ஜாக்பாட் பலன்களை பெறுவார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
2025 ஜூன் மாத ராசிபலன்: 2025 ஜூன் மாதத்தில் ஏற்பட உள்ள செவ்வாய், புதன் சூரியன், சுக்கிரன், உள்ளிட்ட கிரகங்களின் பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளும் 12 ராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், இதனால், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அளவில்லாமல் இருக்கும்.
ஜூன் மாத பெயர்ச்சிகள்: 2025 ஜூன் மாதத்தில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, சில ராசிகள் ஜாக்பாட் பலன்களை பெறுவார்கள் என்கின்றனர் ஜோதிட வல்லுனர்கள். ஜூன் மாதம் முதல் வாரத்தில், ஏதாவது ஜூன் ஏழாம் தேதி செவ்வாய் சிம்ம ராசிக்கு செல்கிறார். சிம்மத்தில் செவ்வாய் ராகு உடன் இணைவார்.
புதன் பெயர்ச்சி: செவ்வாய் பெயர்ச்சியை தொடர்ந்து, ஜூன் மாதம் 15 ஆம் தேதி சூரியன் மிதுன ராசிக்கு செல்கிறார். அறிவாற்றலை கொடுக்கும் புதன் பகவான் ஜூன் மாதம் இரண்டு முறை ராசியை மாற்றுகிறார். ஜூன் 6-ம் தேதி மிதுன ராசிக்கும், ஜூன் 22 ஆம் தேதி கடக ராசிக்கும் செல்கிறார்.
சுக்கிரன் பெயர்ச்சி: ஆடம்பர வாழ்க்கையையும் சுகபோகத்தையும் வழங்கும் சுக்கிரன் ஜூன் மாதம் முழுவதும் மேஷ ராசியில் இருப்பார். மாதக் கடைசியில் ஜூன் மாதம் 29ஆம் தேதி சுக்கிர ரிஷப ராசிக்கு செல்கிறார். ஜூன் மாத கிரக பயிற்சிகள் காரணமாக ஜாக்பாட் பலன்களை பெரும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி: நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேறும். வேலையில் இருந்து வந்த சிறிய சிறிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
கன்னி ராசி: அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. நிதி வரவினால் பொருளாதார நிலை உயரும். முக்கிய பணிகள் அனைத்தும் மிக எளிதாக தடை என்று நிறைவேறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நீடித்திருக்கும்.
துலாம் ராசி: ஜூன் மாதம் வெற்றிகளை அள்ளிக் கொடுக்கும் மாதமாக இருக்கும். கிரண் அருளால் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். கடின உழைப்புக்கான பலனை அடைய தொடங்குவீர்கள்.
தனுசு ராசி: ஜூன் மாதத்தில் சில மங்களகரமான நிகழ்வுகள் வீட்டில் ஏற்படும். பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. இதனால் ஆதாயமும் கிடைக்கும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகள் மூலம் வருமானமும் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
கும்ப ராசி: செவ்வாய் மற்றும் ராகுவின் அருளால், நினைத்த காரியம் நிறைவேறும். அதிர்ஷ்டம் மிகவும் கைகொடுக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் ஒத்துழைப்பால் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். வருமான ஆதாரங்கள் பெருகும். சுப செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்தத் தகவல்களுக்கு ZEE News பொறுப்பேற்காது.