Astro: ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளும்... அதிர்ஷ்ட பலன்களை பெறும் ராசிகளும்

ஏப்ரல் மாத பலன்கள்: ஏப்ரல் மாதம் பிறக்க இன்னும் இரு வார காலம் உள்ள நிலையில், ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகள் குறித்தும், அதனால் பலனடைய போகும் அதிர்ஷ்ட ராசிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.

மாத ராசி பலன்கள் கிரக நிலைகளை கருத்தில் கொண்டு கணிக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதத்தில், சனிபகவானின் நிலை மாற்றம், சூரிய பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி உள்ளிட்ட உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

1 /8

சனி பகவானின் உதயம்: ஏப்ரல் மாத தொடக்கத்தில், சனி பகவான் மீனத்தில் உதயமாவார். மார்ச் மாத இறுதியில் அதாவது, மார்ச் 29 ஆம் தேதி அன்று, சனி பகவான் கும்பத்தில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சியாகும் நிலையில், ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சனீஸ்வரன் மீன ராசியில் உதயமாவார்.

2 /8

செவ்வாய் பெயர்ச்சி: கிரகங்களின் சேனாதிபதி என்று அழைக்கப்படும், செவ்வாய் கிரகம் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி, கடக ராசியில் நுழைகிறார். தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி, சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கும்.

3 /8

சூரிய பெயர்ச்சி: வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, நடைபெறும் சூரிய பெயர்ச்சியுடன் தமிழ் புத்தாண்டு பிறக்கும். சூரிய பகவான் காலச்சக்கரத்தின் முதல் ராசியான மேஷ ராசியில் நுழைவதன் மூலம் சித்திரை பிறக்கிறது. சூரியனின் அருளால் சிலர் ராசிகளில் வாழ்க்கையில் ஜொலிக்க உள்ளனர்.

4 /8

ஏப்ரல் மாதத்தில், சனி பகவானின் நிலை மாற்றமும், சூரியன் பெயர்ச்சி மற்றும் செவ்வாய் பெயர்ச்சி உள்ளிட்ட முக்கிய பெயர்ச்சிகளாலும் முழுமையான பலன்களை பெறக்கூடிய, அதிர்ஷ்ட ராசிகளை அறிந்து கொள்வோம். இவர்கள் வாழ்க்கையின் எல்லாம் வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாக இருப்பார்கள் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

5 /8

மேஷ ராசியினருக்கு, ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகள், மிகவும் சாதகமானதாக இருக்கும். பொருள் இன்பங்களை பெற்று பலனடையலாம். தன்னம்பிக்கையும் மன தைரியமும் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.  

6 /8

துலாம் ராசியினருக்கு ஏப்ரல் மாதம், அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் மாதமாக இருக்கும். வேலையில் தொழிலில், உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் பொறுப்புடன் நிதி ஆதாயங்களையும் பெறுவீர்கள். திருமண தடைகள் நீங்கும்.

7 /8

மீன ராசியினருக்கு, சனிப்பெயர்ச்சி காரணமாக, ஜென்ம சனி காலம் தொடங்கினாலும், நேரம் நன்றாகவே உள்ளது. முதலீடுகளில் லாபம் பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். உறவுகள் மத்தியில் இணக்கம் ஏற்படும்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.