குரு பகவானுக்கு பிடித்த ராசிகள்: வாழ்நாள் முழுதும் குரு அருள், கோடீஸ்வர யோகம்

Published: Jul 15, 2025, 04:53 PM IST|Updated: Jul 15, 2025, 05:07 PM IST

Favoutite Zodiac Signs of Lord Guru: அனைத்து கிரகங்களிலும் மங்களகரமான கிரகம் குரு பகவான். அந்த குரு பகவானுக்கு மிகவும் பிடித்த சில அடிர்ஷ்ட ராசிக்காரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் குரு அருளால் அனைத்து செல்வங்களையும் பெறுகிறார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.

Favoutite Zodiac Signs of Lord Guru: குரு கல்வி, அறிவு, செல்வம், செழிப்பு, திருமணம், குழந்தைகள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறார்.  ஒருவர் மீது குரு பார்வை இருந்துவிட்டால் போதும், அவர் தன் வாழ்வில் அனைத்து வித செல்வங்களையும் அனுபவிக்கிறார். குரு பகவானுக்கு பிடித்த ராசிகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Guru Peyarchi1/10

குரு பெயர்ச்சி

ஜோதிட சஸ்திரத்தின் படி குரு பகவான் சுப கிரகமாக, ஒரு மங்களகரமான கிரகமாகக் கருதப்படுகிறார். குரு பகவான் மே மாதம் பெயர்ச்சி ஆனார். குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

Favoutite Zodiac Signs of Lord Guru2/10

குரு பகவானுக்கு பிடித்த ராசிகள்

குரு பகவான் அனைத்து ராசிக்காரர்கள் மீதும் சமமான அன்பை பொழிகிறார். எனினும், ஜோதிட அடிப்படையில் சில ராசிகள் மீது அவர் கூடுதலான அன்பையும் ஆசியையும் பொழிகிறார். குரு அருளால் அவர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றியை அடைகிறார்கள். மேலும் அவர்கள் எந்த நெருக்கடியில் இருந்தாலும், அவற்றிலிருந்து குருவே அவர்களைப் பாதுகாக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Cancer3/10

கடகம்

கடகம்: கடக ராசிக்காரர்கள் குருவின் ஆசியுடன் வாழ்நாள் மூழுதும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். குரு கடகத்தில் சஞ்சரிக்கும் போதெல்லாம், இந்த ராசிக்காரர்கள் செல்வத்தைப் பெறுகிறார்கள். குருவின் ஆசியால், இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு இருக்கும். இவர்கள் கல்வி, சமூக சேவை மற்றும் தொழில் ஆகியவற்றில் அதிக முன்னேற்றம் காண்கிறார்கள்.

Leo4/10

சிம்மம்

சிம்மம்: சிம்மத்தை ஆளும் கிரகம் சூரியன். குரு பகவான் சூரியனுடன் நட்புறவைக் கொண்டுள்ளார். ஆகையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்போதும் குரு பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்கள் இருக்கும். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அனைத்துத் துறைகளிலும் வெற்றியை அடைகிறார்கள். இவ்ரகளுக்கு நம்பிக்கை மிக அதிகம். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கிறார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் அனைத்து வகையான மகிழ்ச்சியையும் பெற குரு பகவான் உதவுகிறார்.

Sagittarius5/10

தனுசு

தனுசு: தனுசு ராசிக்காரர்கள் உற்சாகம் நிறைந்தவர்கள். குருவின் ஆசியால், இவர்கள் எப்போதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இவர்கள் நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். குருவின் அருளால், அவர்களின் தோல்வியுற்ற பணிகளும் வெற்றி பெறுகின்றன. இந்த ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகள். அனைத்து கடினமான சூழ்நிலைகளிலும் குரு பகவான் அவர்களைப் பாதுகாக்கிறார்.

Pisces6/10

மீனம்

மீனம்: குரு பகவானுக்கு பிடித்தமான ராசிகளில் ஒன்று மீனம். குரு வாழ்நாள் முழுதும் மீன ராசிக்காரர்களைப் பாதுகாக்கிறார். இந்த ராசிக்காரர்கள் கருணையுள்ளம் கொண்டவர்கள். குருவின் ஆசியுடன், இவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இவர்கள் கலை, இசை மற்றும் இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்கள் இயற்கையில் சகிப்புத்தன்மை கொண்டவர்கள். குரு பகவானிற்கு இவர்களின் பொறுமையான தன்மை காரணமாக இவர்களை மிகவும் பிடிக்கும்.

Lord Guru7/10

குரு பகவானின் அருள் பெற

சுப கிரகமான குரு பகவானின் அருள் பெற, ‘ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்' என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லாம்.

Lord Guru8/10

குரு பகவான்

இது தவிர குரு அருளையும் அதிகப்படியான நற்பலன்களையும் பெற, ‘குரவே சர்வ லோகானாம், பிஷஜே பவ ரோகிணாம், நிதயே சர்வ வித்யானாம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தயே நமஹ’ என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம்.

Lord Jupiter9/10

குரு பகவான்

மாணவர்கள் குறிப்பாக கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும், ஞானம் பெறவும், அறிவாற்றல் பெருகவும் குரு பகவானின் அருள் மிக முக்கியம். வியாழக்கிழமைகளில் குரு பகவானின் சன்னிதியில் கொண்டைக்கடலை மாலை சாற்றுவது தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற உதவும்.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.