Most Favourite Zodiac Signs of Lord Shani: சனி பகவானுக்கு பிடித்த ராசிகள் எவை? யாருக்கு அவர் அதிக அருள் பொழிகிறார்? இங்கே தெரிந்துகொள்ளலாம்.
Most Favourite Zodiac Signs of Lord Shani: ஜோதிடத்தில் சனி பகவானின் முக்கியத்துவம் மகத்தானது. அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகர்பவர் சனி பகவான். ஒவ்வொரு ராசியிலும் அவர் அதிக நாட்களுக்கு இருப்பதால், ராசிகளில் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. நீதியின் கடவுள் என அழைக்கப்படும் இவர் அனைத்து ராசிகள் மீதும் சமமாக கருணை பொழிகிறார். எனினும் சில ராசிகள் அவருக்கு பிடித்த ராசிகளாக இருக்கின்றன. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார்.
மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பெயர்ச்சி இந்த ஆண்டின் முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
சனி பகவான் பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் அருள் புரியும் கிரகம். எனினும் ஜோதிட ரீதியாக சில ராசிகள் இவருக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கின்றன. இவர்களை சனி பகவான் உடனிருந்து காக்கிறார். சனி பெயர்ச்சியின் நல்ல பலன்களை அளிக்கிறார், ஏழரை சனி காலத்தில் பிரச்சனைகளை குறைக்கிறார். சனி பகவானின் மனம் கவர்ந்த அந்த 5 ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் இந்த ராசிக்காரர்களுக்கு சுப விளைவுகளையே அளிக்கிறார். வாழ்நாள் முழுவதும் அவர் ரிஷப ராசிக்காரர்களின் உடனிருந்து சோதனைகளிலிருந்து காக்கிறார். இவர்களது விடா முயற்சியும் சனியின் அருளும் இவர்களுக்கு வாழ்வில் அனைத்து வித மகிழ்ச்சியையும் அளிக்கின்றன.
துலாம்: துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். துலாம் ராசி சனிக்கு மிகவும் பிடித்தமான ராசி. சனி உச்சத்தில் இருக்கும்போது இந்த ராசியில் சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவானிடமிருந்து எப்போதும் நல்ல பலன்கள் கிடைக்கும். ஜோதிடத்தின்படி, சனி பகவான் தனக்கு பிடித்த ராசிகளுக்கு ஏழரை சனி காலத்தில் பெரிய பிரச்சனைகளை அளிப்பதில்லை. துலாம் ராசிக்காரர்கள் செழிப்புடன் இருக்க சனி பகவான் உதவுகிறார். இவர்களின் கடினமான உழப்பு காரணமாக சனி இவர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கிறார்.
தனுசு: தனுசு ராசி சனி பகவானின் சிறப்பு அருளை பெறும் ராசிகளில் ஒன்று. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் எப்போதும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை. இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரை சனி மற்றும் அஷ்டம சனியின் பாதிப்புகள் பெரிதாக ஏற்படுவதில்லை. இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சமூகத்தில் மரியாதையையும், அதிக செல்வத்தையும் வழங்குகிறார்.
மகரம்: மகரம் சனியின் விருப்பமான ராசிகளில் ஒன்று. ஆகையால் இந்த ராசியில் பிறந்தவர்கள் சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலங்களில் அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. மகர ராசிக்காரர்கள் தோல்வியை எளிதில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் உற்சாகமாகவும் கடின உழைப்பாளிகளாகவும் இருப்பார்கள். இவர்கள் ஒரு வேலையை எடுத்தால் அதை முடிக்காமல் விட மாட்டார்கள். இந்த காரணத்தினால், இவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்கும்.
கும்பம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் மீது சனிக்கு சிறப்பு பிரியம் உண்டு. ஏனெனில் கும்பம் சனியின் ராசி. எனவே, கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் சனியின் அருளைப் பெறுவார்கள். இதன் விளைவாக, இந்த ராசியில் பிறந்தவர்கள் எந்த நிதிப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது. சனி பகவானின் ஆசிர்வாதத்தால், இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அடைகிறார்கள். ஏழரை சனி (Ezharai Sani) பாதிப்பு இவர்கள் மீது அதிகமாக இருப்பதில்லை.
சனி பகவானின் அருள் பெற நேர்மையான முறையில் வாழ்ந்தாலே போதும். பிறருக்கு தீங்கு செய்யாமலும், தீங்கு நினைக்காமலும் இருந்து முடிந்த வரை மற்றவர்களுக்கு தான தர்மம் செய்பவர்களை சனி பகவான் காத்து ரட்சிக்கிறார்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.