Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டில் சனியும் குருவும் பெயர்ச்சி அடையவுள்ளனர். ராகு, கேது பெயர்ச்சியும் இவ்வாண்டில் நடக்கவுள்ளது. இந்த பெயர்ச்சிகளால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Guru Peyarchi, Sani Peyarchi Peyarchi Palangal: மார்ச் மாதம் மீன ராசியில் சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. பிப்ரவரி மாதம் வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான் மே மாதம் மிதுன ராசியில் பெயர்ச்சி அடைகிறார். நிழல் கிரகமான ராகு, 2025ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கும்ப ராசியில் பெயர்ச்சி ஆவார். 2025 ஆம் ஆண்டு கேது மே 18 ஆம் தேதி சிம்மத்தில் பெயர்ச்சி ஆவார். சனி பகவான், குரு பகவான், ராகு, கேது ஆகிய கிரங்களின் இயக்கம் மெதுவாக இருப்பதால் இவை ராசிக்காரர்களுக்கு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றின் பெயர்ச்சியால் 2025 ஆம் ஆண்டு மிகுதியான நற்பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமன கிரகமான சனி பகவான், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். அவர் தற்போது கும்ப ராசியில் உள்ளார். 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். மீன ராசியில் நடக்கவுள்ள சனி பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டின் மிக முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் உள்ளார். 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வக்ர நிவர்த்தி அடையும் குரு, மே மாதம் மிதுன ராசியில் பெயர்ச்சி ஆவார். சனி பெயர்ச்சியை போலவே இதுவும் 2025 ஆம் ஆண்டின் ஒரு முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்பட்கின்றது.
நிழல் கிரகமான ராகு அக்டோபர் 30, 2023 முதல் மீனத்தில் உள்ளார். இந்த வருடம் அதாவது 2024ல் ராகு பெயர்ச்சி ஆகவில்லை. 2025ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி ராகு கிரகம் கும்ப ராசியில் பெயர்ச்சி ஆவார். நக்ஷத்திர மாற்றத்தைப் பொறுத்த வரை இரண்டு முறை அவர் நட்சத்திரத்தை மாற்றுவார்.
2025 ஆம் ஆண்டு கேது மே 18 ஆம் தேதி சிம்மத்தில் பெயர்ச்சி ஆவார். நட்சத்திர மாற்றத்தைப் பொறுத்தவரை, ராகுவைப் போலவே, அவரும் இரண்டு முறை ராசியை மாற்றுவார்.
பொதுவாக அனைத்து கிரக மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றால் சில ராசிகளுக்கு சுப விளைவுகளும் சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.மெதுவான கிரகங்களின் இயக்கம் ராசி அறிகுறிகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சனி பகவான், குரு பகவான், ராகு, கேது ஆகிய கிரங்களின் இயக்கம் மெதுவாக இருப்பதால் இவை ராசிக்காரர்களுக்கு நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும். இவற்றின் பெயர்ச்சியால் 2025 ஆம் ஆண்டு மிகுதியான நற்பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
மேஷம்: 2025 ஆம் ஆண்டில், குரு அருளால், உங்களுக்கு நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தொழிலிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவார்கள். உயர்கல்விக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய வேலை கிடைக்கலாம். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சிக்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன. தொழில் பயணங்களின் போது புதிய தொழில் வாய்ப்புகள் கூடும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்: சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்ச்சியின் தாக்கத்தால் வியாபாரத்தில் உயர்வு இருக்கும். மாணவர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பயண வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களை சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். வளாகத் தேர்வின் மூலம் வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. காதல் வாழ்க்கையில் இனிமை இருக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட இந்த வருடம் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்: சனியின் பிடியில் இருந்து விடுபடுவதால் உங்கள் பிரச்சனைகள் குறையும். குருவின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிப்பதால், உங்கள் நிதி நிலை மிகவும் வலுவாக இருக்கும். கணிசமான நிதி ஆதாயம் ஏற்படும். மாணவர்களின் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்துடன் நேரத்தை செலவிட ஏற்ற காலமாக இது இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் நிதி ஆதாயத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ராகுவின் சாதக நிலையால் உங்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். ஒரு புதிய கலையை கற்றுக்கொள்ள அல்லது புதிய திட்டத்தை தொடங்க இது ஒரு நல்ல நேரம். சனி பெயர்ச்சி தாக்கத்தால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயண வாய்ப்புகள் உண்டு. புதிய நண்பர்கள் அமைவார்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், படிப்பு அல்லது வேலை எதுவாக இருந்தாலும், நீங்கள் வெளிநாடு செல்ல நினைத்தால், இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் வருடம் உற்சாகமாக இருக்கும். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் குரு பகவானின் அருளால் உடல் நலம் சீராகும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். வெற்றியும் கிடைக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய மனை, வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. ஆன்மீக வளர்ச்சிக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.