செப்டம்பர் மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்

Published: Sep 02, 2025, 08:35 AM IST|Updated: Sep 02, 2025, 08:35 AM IST

Monthly Horoscope September 2025: செப்டம்பர் மாதம் பிறந்துவிட்டது. இந்த மாதம் சில ராசிகளுக்கு அமோகமான நற்பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Lucky Zodiac Signs of September 2025: செப்டம்பர் 2025 இல் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். இவற்றால் சில ராசிகளுக்கு நல்ல பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும். செப்டம்பர் கிரக பெயர்ச்சிகளால் அமோகமான நற்பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Monthly Horoscope September 20251/10

செப்டம்பர் மாத ராசிபலன்

செப்டம்பர் மாதத்தில் முக்கிய கிரகங்களின் நிலைகளில் மாற்றம் இருக்கும். சூரியன், புதன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் இந்த மாதம் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ஜோதிட ரீதியாகவும் இது முக்கிய ஒரு மாதமாக உள்ளது.

Lucky Zodiac Signs of September 20252/10

மாத ராசிபலன்

செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள கிரக பெயர்ச்சிகளில் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் நடக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Aries3/10

மேஷம்

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். உங்கள் மென்மையான மற்றும் வேடிக்கையான இயல்பைக் காட்ட முயற்சிப்பீர்கள். உங்கள் ஆளுமை நம்பிக்கையுடன் இருக்கும். உங்கள் நடத்தையில் நம்பிக்கையும் தலைமைத்துவப் பண்புகளும் தெரியும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் அறிவுசார் திறன்களைக் காட்டவும் உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.

Taurus4/10

ரிஷபம்

ரிஷபம்: செப்டம்பர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான பொழுதை கழிப்பீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். பல கடினமான பணிகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

Gemini5/10

மிதுனம்

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் அனுகூலமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் பழைய நண்பர்கள் சிலர் உங்களுடன் மீண்டும் இணைவார்கள். மாத தொடக்கத்தில், வேலையில் உங்கள் சக ஊழியர்களின் பிரச்சினைகளை நீங்கள் தீர்க்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் நடந்துமுடியும். அலுவலக பணிகளீல் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்.

Cancer6/10

கடகம்

கடகம்: செப்டம்பர் மாதம் கடக ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை துறைகளில் வெற்றிகளை காண்பீர்கள். உங்கள் செயல்திறன் மேம்படும். அலுவலக பணிகளில் பல வெற்றிகளை காண்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

Libra7/10

துலாம்

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் மாத தொடக்கத்தில் இருந்து மிகவும் வலுவான ஆளுமையைக் கொண்டிருப்பார்கள். மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் செல்வாக்கு செலுத்தவும் முயற்சி செய்வீர்கள். உங்கள் ஆளுமை கவர்ச்சிகரமானதாக இருக்கும். உங்கள் புகழ் அதிகரிக்கும். வேலையில், தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

Sagittarius8/10

தனுசு

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் பல நல்ல செய்திகள் கிடைக்கும். முன்னர் செய்த முதலீடுகளில் லாபம் காண்பீர்கள். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பு பலனளிக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மூத்த அதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டலாம். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

Pisces9/10

மீனம்

மீனம்: செப்டம்பர் மாதம் மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாத வருமானம் அதிகரிக்கும். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, இரண்டிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.