ஐபிஎல்லில் MOM விருதை பெற்ற 7 வயதான வீரர்கள்.. டிராவிட்டுடன் இணைந்த தோனி.. முழு பட்டியல் இதோ!

ஐபிஎல்லில் ஆட்ட நாயகன் விருதை பெற்ற வயதான வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம். 

 

43 வயதான எம். எஸ். தோனி நேற்று (ஏப்ரல் 14) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுட்த்தினார். அப்போட்டியில் சென்னை அணியே வென்றது. இதன் காரணமாக ஆட்ட நாயகன் விருது எம்.எஸ். தோனிக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் ஆட்ட நாயகன் விருதை பெற்ற வயதான வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். 

1 /7

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் எம். எஸ். தோனி 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே வென்றது. இதன் காரணமாக அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் அந்த விருதை பெற்ற மிக வயதான வீரர் என்ற பெருமையை பெற்றார். 

2 /7

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் 2015ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடினார். அப்போது அவர் ஆட்ட நாயகன் விருதை பெற்று இந்த பட்டியலில் இணைந்தார். 

3 /7

2014 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய பிறகு தாம்பே இந்தப் பாராட்டைப் பெற்றார், இது லெக் ஸ்பின்னரின் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

4 /7

இலங்கையின் புகழ்பெற்ற ஆஃப்-ஸ்பின்னர் 2013 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார். அப்போது ஒரு போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பெற்று இந்த பட்டியலில் இணைந்தார். 

5 /7

2013ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் டிராவிட் அந்த தொடரின் ஒரு போட்டியில் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் அவர் ஆட்ட நாயகன் விருதை பெற்ற வயதான வீரர்களின் பட்டியலில் இணைந்தார். 

6 /7

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் 2011 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த விருதைப் பெற்றார்.

7 /7

2015 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக காலிஸின் ஆல்ரவுண்ட் ஆட்டம் அவருக்கு ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுத் தந்தது.