MS Dhoni about ipl retirement: கடந்த 2020ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த தோனி, ஐபிஎல்லில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
1/52025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமாக விளையாடியது. தொடரில் இருந்து முதலில் வெளியே சென்ற அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.
2/5அந்த அளவிற்கு பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சொதப்பியது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் இப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடியது கிடையாது.
3/5இந்த சூழலில், வரும் 2026 ஐபிஎல் தொடரிலாவது சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே உள்ளது. அதற்கேற்ப சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்காக தயாராகி வருகிறது.
4/5இதற்கிடையில், எம்.எஸ். தோனி, அடுத்து வரும் ஐபிஎல் தொடர்களில் விளையாடுவாரா? அல்லது ஓய்வை அறிவிப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில், இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் எம். எஸ். தோனி.
5/5சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவிற்கு என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இதில் சூட்சமம் என்னவென்றால், உடல் தகுதிக்கு இன்னும் டிக் மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டும் கிரிக்கெட் விளையாட முடியாது அள்ளவா என கிண்டலாக தெரிவித்தார்.