IPL 2025: ஓய்வுபெறும் இந்த 5 வீரர்கள்... இதுதான் கடைசி ஐபிஎல் தொடர்!

IPL 2025: ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், கடைசி ஐபிஎல் தொடரில் விளையாடக்கூடிய வீரர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம். 

 

ஐபிஎல் தொடரில் தோனி உள்ளிட்ட மூத்த நட்சத்திர வீரர்கள் பலர் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், மூத்த நட்சத்திர வீரர்கள் சிலருக்கு இந்த ஐபிஎல் தொடர் கடைசி தொடராக இருக்க வாய்ப்புள்ளது. அப்படி யாருக்கெல்லாம் இருக்காலம் என்பதை இங்கு பார்க்கலாம். 

1 /5

இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி. 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை இவர் 264 போட்டிகளில் விளையாடி 5,243 ரன்கள் எடுத்துள்ளார். இவர் இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2 /5

தென்னாப்பிரிக்காவின் மூத்த நட்சத்திர வீரரான டு பிளெசிஸ் இம்முறை டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். இவருக்கு 40 வயதாகிவிட நிலையில், இத்தொடருடன் அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3 /5

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார். 38 வயதாகும் இவர் இத்தொடருடன் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

4 /5

சிறந்த ஆல் ரவுண்டரான மொயீன் அலி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இவர், இத்தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /5

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இத்தொடரில் குஜராத் அணிக்காக விளையாட இருக்கிறார். இதுவரை 110 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள இவர், 93 விக்கெட்களை எடுத்துள்ளார்.