Chennai Super Kings: ஐபிஎல் 2026 மினி ஏலம் நடைபெறும் தேதிகள் குறித்த அப்டேட் வெளியான நிலையில், சிஎஸ்கே அணி ஏலத்திற்கு விடுவிக்கும் 5 வீரர்கள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் யார் என இங்கு காணலாம்.
IPL 2026 Mini Auction: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஐபிஎல் 2025 சீசனில் 10வது இடத்தில் நிறைவு செய்தது. சிஎஸ்கே அணி இதனால் அணியை பலமாக்க நினைக்கும். அந்த வகையில், சிஎஸ்கே ஏலத்திற்கு விடுவிக்க இருக்கும் வீரர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
1/8ஐபிஎல் 2026 மினி ஏலம் வரும் டிசம்பர் 13-15 தேதிகளில் நடைபெற வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
2/8நேற்று மதுரையில் புதிய மைதானத்தை தொடங்கிவைத்த தோனியை பார்க்கும்போதே உடற்தகுதியுடன் இருந்தார். அப்படியிருக்க, அவர் வரும் 2026 சீசனில் நிச்சயம் பங்கெடுப்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
3/8அதே நேரத்தில், சிஎஸ்கே விடுவிக்கும் வீரர்கள் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன. ரூ.9.75 கோடிக்கு எடுக்கப்பட்ட அஸ்வின் ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவித்தவிட்ட நிலையில், தற்போது சிஎஸ்கே இந்த 5 வீரர்களையும் விடுவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களை ஒவ்வொருவராக இங்கு காணலாம்.
4/8டெவான் கான்வே: சிஎஸ்கே 2023இல் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றியவர் கான்வே. இருப்பினும் சமீபத்தில் டி20 போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இவர் கடந்த சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 156 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். கடந்தாண்டு மெகா ஏலத்தில் கான்வேவை சிஎஸ்கே ரூ.6.25 கோடிக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
5/8சாம் கரன்: வெளிநாட்டு ஆல்-ரவுண்டரான இவரை சிஎஸ்கே கடந்த சீசனில் 5 போட்டிகளில் களமிறக்கியது. 114 ரன்களையும், 1 விக்கெட்டை எடுத்திருந்தார். இவருக்கு பதில் வேறு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டருக்கு சிஎஸ்கே குறிவைக்கும். இவரை மெகா ஏலத்தில் ரூ.2.4 கோடிக்கு சிஎஸ்கே எடுத்திருந்தது.
6/8ராகுல் திரிபாதி: ஆயுஷ் மாத்ரே சிஎஸ்கேவுக்கு வருவதற்கு முன் இவர்தான் ஓபனிங்கில் இறங்கி படுமோசமான ஆட்டத்தை கடந்தாண்டு வெளிப்படுத்தினார். 5 போட்டிகளில் 55 ரன்களை மட்டுமே இவர் அடித்திருந்தார். ஆயுஷ் மாத்ரே, ஷேக் ரஷீத், உர்வில் பட்டேல் என இளம் வீரர்கள் அதிகரித்துவிட்டதால் இவருக்கு சிஎஸ்கேவில் விளையாட வாய்ப்பு கிடைப்பதும் அரிதாகிவிட்டது. இவரை ரூ.3.40 கோடிக்கு சிஎஸ்கே எடுத்தது.
7/8தீபக் ஹூடா: திரிபாதியை விட மோசமாக விளையாடியவர் என்றால் அது தீபக் ஹூடா எனலாம். அவர் 7 போட்டிகளில் விளையாடி 31 ரன்களை அடித்தார். ஒரே ஒரு ஓவர் மட்டும் வீசினார். இவரை சிஎஸ்கே ரூ.1.70 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
8/8விஜய் சங்கர்: இவர் கடந்த சீசனில் 6 இன்னிங்ஸில் விளையாடி 118 ரன்களை அடித்தார். ஒரு போட்டியில் மட்டும் நிதானமாக அரைசதம் அடித்திருந்தார். ஒரு ஓவர் கூட வீசவில்லை. இவரை சிஎஸ்கே ரூ.1.2 கோடிக்கு எடுத்தது.