தோனி மட்டும் வெற்றிகளை பெறுவது எப்படி? ரகசியம் இதுதான்

MS Dhoni : எம்எஸ் தோனி மட்டும் எதை தொட்டாலும் அது வெற்றியாக மாறுவது எப்படி? ரகசியம் இதுதான்

MS Dhoni : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கிரிக்கெட்டில் மட்டுமல்லாது முதலீடு, வாழ்க்கை என எல்லாவற்றிலும் வெற்றிகரமாக இருக்கிறார். அவருடைய வெற்றியின் ரகசியங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்

1 /10

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் எம்எஸ் தோனி. அவரது தலைமையில் இந்திய அணி பல சாதனைகளை படைத்தது. அதற்கு காரணம் தோனி எந்த அழுத்தத்திலும் அமைதி காப்பதை கடைபிடிப்பார். 

2 /10

தோல்விகளை தோல்விகளாக பார்க்காமல் அதில் இருந்து கற்றுக்கொள்வதை முக்கிய பாடமாக அவர் வைத்திருந்தார். ஒரு போட்டியில் செய்த தவறு அடுத்த போட்டியில் வராமல் பார்த்துக் கொள்வார். தவறுகள் அதிகம் நடக்காமலும் பார்த்துக்கொள்வார். எந்த சூழலுக்கும் உடனடியாக ரியாக்ட் செய்ய மாட்டார் தோனி. சூழலை முன்பே கணித்து அதற்கேற்ப செயல்களை செய்யகூடிய ஆற்றல் தோனியிடம் இருந்தது.  

3 /10

தோனியே ஒருமுறை பேட்டியில் சொல்லும்போது, எப்போதும் ரிசல்ட்டுகளை பற்றி கவலைப்படக்கூடாது. உங்களுடைய 100 விழுக்காடை கொடுத்திருக்கிறீர்களா? என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். அப்படி நீங்கள் கொடுத்தால் நிச்சயம் வெற்றி தானாக கிடைக்கும் என கூறியுள்ளார்  

4 /10

இம்முறை கொடுக்கமுடியவில்லை என்றால் அடுத்த முறை அந்த 100 விழுக்காடு முயற்சியை கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் உழைப்பு வெற்றிக்கு மீறியதாக இருந்தால் தோல்வி நிச்சயம் உங்களை தேடி வராது என தோனி கூறியுள்ளார்  

5 /10

எப்போதும் ஒரே மாதிரி முயற்சிக்காமல் சில சமயங்களில் வித்தியாசமான அணுகுமுறையையும் நீங்கள் கையாள கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு உங்களை நீங்கள் முதலில் தயார்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது எந்த பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவு இருக்கும்.  

6 /10

சில சமயங்களில் உங்களின் முயற்சிகள் சரியாக இருக்கும்போது அதிர்ஷ்டமும்கூட ஒத்துழைக்கும். அப்போது உங்களின் வேலை ஈஸியாக இருக்கும் என தோனி கூறியுள்ளார். அதேநேரத்தில் அதிர்ஷ்டத்தை நீங்கள் எதிர்பார்த்திருக்கவும் கூடாது. அதுவாக கிடைக்கும்போது ஏற்றுக் கொள்ளுங்கள் என தோனி கூறியுள்ளார்.   

7 /10

எந்த பொறுப்பை யாரிடம் கொடுத்தால் வேலை ஆகும் என நீங்கள் நினைக்கிறீர்களோ, அதனை அவர்களிடம் கொடுத்துவிடுங்கள். பிறருக்காக உங்கள் முடிவை மாற்றிக் கொண்டால் பின்னர் தோல்வியை தவிர்க்க முடியாது.   

8 /10

வெற்றிக்காக நீங்கள் சிந்திக்கும்போது, அதற்கு யார் சரியாக இருப்பார்கள் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்தால், அவர் நிச்சயம் அதற்கான பலனை கொடுப்பார். 

9 /10

அதேநேரத்தில் எத்தகைய முடிவுகளையும் தள்ளிப்போடக்கூடாது. வேண்டாம் என்றால் அந்த நொடியே வேண்டாம் என கூறிவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுங்கள். இரண்டு முடிவுகள், சந்தேகம் ஆகியவை தோல்வியை அதிகம் தரக்கூடியவை. முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். 

10 /10

அதனால் வரக்கூடிய சாதக பாதங்களை எப்போதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றி தள்ளிப்போகலாமே தவிர உங்களுக்கு கிடைக்காமல் போகாது. இதுவே தோனியின் வெற்றிக்கான முக்கியமாக அவர் கடைபிடிக்கும் வழிமுறைகள் ஆகும்.