2025 புது வருடம் வருவதற்குள் படிக்க வேண்டிய 7 புத்தகங்கள்!!
Steal Like An Artist: 96 பக்கங்கள் நிறைந்த இந்த புத்தகத்தை, ஆஸ்டின் க்லியோன் என்பவர் எழுதியிருக்கிறார். படைப்பாற்றலை அதிகரிக்க உதவும் புத்தகங்களுள் இதுவும் ஒன்று.
The War of Art புத்தகத்தை Sun Tzu என்பவர் எழுதியிருக்கிறார். இதில், 80-100 பக்கங்கள் வரை இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் போரில் வெற்றி பெறவும் என்னென்ன யுக்திகளை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த புத்தகம் விவரிக்கிறது.
Ikigai ஜப்பானிய புத்தகத்தை, பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்திருக்கின்றனர். இந்த புத்தகம், வாழ்வில் நோக்கம் மற்றும் மகிழ்ச்சியை கண்டுபிடிக்க வழி வகுத்து கொடுக்கிறது.
Who Moved My Cheese? புத்தகத்தை ஸ்பென்சர் ஜான்சன் எழுதியிருக்கிறார். இது ஒரு சிறுகதை புத்தகம் ஆகும். இதில், வாழ்வில் என்ன நிலை வந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு எப்படி முன்னேற வேண்டும் என்பதற்கான சீக்ரெட்டை எழுதியிருக்கின்றனர்.
Atomic Habits புத்தகத்தை, ஜேம்ஸ் க்ளியர் எழுதியிருக்கிறார். தினசரி நாம் செய்யும் சிறு சிறு மாற்றங்கள் எப்படி ஒரு பெரிய மாற்றத்திற்கு வழி வகுக்கிறது என்பதை காண்பிக்கும் புத்தகம் இது.
Make Your Bed புத்தகத்தை அட்மிரல் வில்லியம் ரேவன் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தை எழுதியவர் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்தவர். இவரது அனுபவங்களை கூறுகிறது, இந்த புத்தகம்.
The Four Agreements புத்தகத்தை, டான் மிகல் ரூயிஸ் என்பவர் எழுதியிருக்கிறார். இது, வாழ்வில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து எப்படி மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதை காட்டுகிறது.