இந்தியாவின் மிரட்டலான 8 மலை பிரதேசங்கள்... ஏப்ரல் மாதத்தை கூலாக்க பயணம் செய்ய சூப்பர் இடங்கள்!

Must Visit Hill Station In April: கோடை காலம் இப்போதே தொடங்கிவிட்டது எனலாம். அந்தளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. மேலும், ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறையும் தொடங்கும் என்பதால் இந்த மலை நகரங்கள் உங்கள் சுற்றுலா திட்டத்திற்கு கைக்கொடுக்கும்.

1 /8

டார்ஜிலிங்: மேற்கு வங்கத்தில் உள்ள இங்கு தேயிலை தோட்டங்கள் நிறைந்திருக்கும். இங்கு பனி அடர்ந்த கஞ்சன்ஜங்கா மலைத்தொடரை கண்டு ரசிக்கலாம். மாசற்ற இயற்கையை ரசிக்க சிறந்த இடம் இதுவாகும். இங்கு வரும் பயணிகள் நிச்சயம் டார்ஜிலிங் ஹிமாலையன்  ரயில்வேயில் பயணித்து சிறப்பான அனுபவத்தை பெற வேண்டும். இங்கு தேநீரும் அருமையாக இருக்கும்.   

2 /8

முசோரி: உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைகளின் அரசி என்றழைக்கப்படுகிறது. இங்கு பயணிகள் ரசிப்பதற்கு கெம்டி அருவி, கன் ஹில் உள்ளிட்ட பல ஸ்பாட்கள் இருக்கின்றன.   

3 /8

கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்த மலை நகரம் நிச்சயம் உங்களை மலைக்க வைக்கும். பனி அடர்ந்த மலை முகடுகள், பச்சை அடர்ந்த பள்ளத்தாக்கு ஆகியவை கண்ணுக்கு விருந்து கொடுக்கும்.  

4 /8

நைனிடால்: அழகான ஏரிகள் மற்றும் பச்சை அடர்ந்த பள்ளத்தாக்குகளுக்கு பெயர்பெற்றவை நைனிடால். இங்குள்ள நைனி ஏரி மலைகளால் சூழப்பட்டிருக்கிறது. இது பயணிகளுக்கு மன நிம்மதியை அளிக்கும். போட்டிங், மலையேற்றம் உள்ளிட்டவை இங்கு பிரபலமானவை. இங்குள்ள வானிலை உங்களது ஏப்ரலை குளுமையாக்கிவிடும்.  

5 /8

லான்ஸ்டவுன்: உத்தரகாண்டின் அமைதியான மலை நகரம் இதுவாகும். இங்கு நீங்கள் தனிமையாக விடுமுறையை கழிக்க சிறந்த இடம். வேறெங்கும் பார்க்க இயலாத இயற்கையை அழகை இங்கு நீங்கள் கண்டு ரசிக்கலாம்.   

6 /8

சிம்லா: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த நகரமே அவர்களுக்கு கோடை காலத்தை கழிக்கும் நகரமாகும். எனவே, இங்கு பல காலனிய காலத்து கட்டடங்களை காணலாம். நீங்கள் கோடை காலத்தை சிறப்பாக கழிக்க வேண்டும் என்றால் இங்கு தயங்காமல் இப்போதே டிக்கெட் போடுங்க.  

7 /8

அவுலி: உத்தரகாண்டின் மற்றொரு சுற்றுலா தலங்களில் ஒன்று. ஆனால் இது பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். இமயமலையின் ரம்மியமான காட்சிகளை இங்கு கண்டு ரசிக்கலாம்.  

8 /8

மணாலி: "கடைசியாக வந்தார் விநாயக் மகாதேவ்..." என்பதை போல் ஹிமச்சால் பிரதேசத்தில் உள்ள மணாலியை குறிப்பிடலாம். பிரம்மாண்டமான இமயமலைத் தொடர், பைன் காடுகள் நிறைந்த மரகதப் பள்ளத்தாக்குகள் இங்கு உள்ளன.