Dolphins In India: இந்தியாவின் இந்த 7 கடற்கரைகளில் நீங்கள் டால்பின்களை கண்டுரசிக்கலாம். அவை குறித்து இங்கு விரிவாக காணலாம்.
1/8கோவா: இங்குள்ள அரேபிய கடலோரப் பகுதிகள்தான் இந்தியாவில் டால்பின்கள் அதிகம் இருக்கும் பகுதிகள் ஆகும். சின்குவெரிம், மோர்ஜிம், பலோலெம் கடற்கரைகளில் இருந்து டால்பின்களை அதிகம் காணலாம். ஹம்பேக் டால்பின்கள், பாட்டில்நோஸ் டால்பின்களை நீங்கள் படகில் சென்று கூட பார்க்கலாம். அக்டோபர் முதல் மார்ச் வரை நீங்கள் இங்கு பயணிக்கலாம்.
2/8வங்காள விரிகுடா: தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் இருந்து நீங்கள் செல்ல வேண்டும். இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையே உள்ள இந்த வங்காள விரிகுடா டால்பின்களுக்கான பாதுகாப்பாக்கப்பட்ட பகுதியாகும். கோடிட்ட டால்பின்கள் மற்றும் பாட்டில்நோஸ் டால்பின்கள் இங்கு காணப்படுகின்றன.
3/8கோகர்னா: கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த ஓம் கடற்கரையில் நீங்கள் அதிகம் டால்பின்களை காணலாம். அரேபிக் கடலோரமான இங்கு படகு சேவைகள் இருக்கும், அதில் போய் சென்றால் டால்பின்களை அருகாமையில் காணலாம். ஹேம்பேக் டால்பின்கள் காணப்படுகின்றன.
4/8தர்கர்லி: மகாராஷ்டிராவில் உள்ள இந்த கோன்கடன் கடலோர பகுதியில் நீங்கள் டால்பின்களை அதிகம் பார்க்கலாம். மாசு குறைவாக காணப்படும் இங்கு பவளப்பாறைகளும் அதிகம். படகுகளில் சென்றால் டால்பின்களை அருகாமையில் காணலாம். ஸ்பின்னர் மற்றும் ஹேம்பேக் டால்பின்கள் இங்கு காணப்படுகின்றன.
5/8கட்ச் வளைகுடா: குஜராத்தின் ஜாம்நகர் அருகே உள்ளது. சதுப்புநிலங்கள் மற்றும் பவளப்பாறைகள் டால்பின்களை ஈர்க்கும். மிதாப்பூர் அல்லது நாராரா தீவுகளில் இருந்து நீங்கள் சென்றால் டால்பின்களை பார்க்கலாம். பார்டில்நோஸ் மற்றும் ஹேம்பேக் டால்பின்கள் இங்கு காணப்படும்.
6/8மால்வன் கடலோரம்: மகாராஷ்டிராவின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்வான் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளில் டால்பின்கள் அதிகம் காணப்படுகிறது.
7/8திஹா கடற்கரை: மேற்கு வங்கத்தில் உள்ள இந்த கடற்கரையில் டால்பின்களை நீங்கள் காணலாம். சந்தனேஷ்வர் கோவில் அருகே இருந்து படகு மூலம் சென்றோ அல்லது திஹா கடற்கரை ஓரத்திலோ நின்றுகொண்டு டால்பின்களை காணலாம். இந்தோ பசிபிக் ஹேம்பேக் டால்பின்கள் இங்கு காணப்படுகின்றன.
8/8பொறுப்பு துறப்பு: பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. சூழல் மாறுதலுக்கு உட்பட்டது. எனவே, நீங்கள் சுற்றுலாவுக்கு திட்டமிடும்போது, அதற்கேற்ற வல்லுநர்களிடம் அல்லது உள்ளூர் மக்கள் யாரிடமாவது ஆலோசனை செய்யுங்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.