Mutual Fund: மாதம் ரூ.5000 SIP முதலீடு போதும்... ஓய்வின் போது ரூ.2 கோடி சேர்க்க உதவும் ஃபார்முலா

SIP Mutual Fund: நம் அனைவருக்கும், ஓய்வூதியத் திட்டமிடல் அவசியம். உங்கள் வருவாய் குறைவாக இருந்தாலும், சேமிப்பு ஒரு சவாலாக இருந்தாலும், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க உங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்வது முக்கியம்.

அதிகம் வேண்டாம், ஒரு சிறிய தொகை கூட குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், ஒரு முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) மாதாந்திர முதலீடு ரூ. 5,000 என்ற அளவில் முதலீட்டை தொடங்குவது ரூ. 2 கோடி ஓய்வூதியத் தொகையை எவ்வாறு உருவாக்கும் என்பதைக் இந்தக் கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்வோம்.

 

1 /9

ஓய்வு காலத்திற்கான நிதி: உங்கள் முதலீடுகளை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது பணத்தை பன்மடங்காக்க உதவும். அதிக வருமானம் கொடுக்கும் முதலீடுகளை திட்டமிடுவதன் மூலம், பணத்தைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்

2 /9

பரஸ்பர நிதியம்: இளமையிலே சீக்கிரமாகத் தொடங்கி தொடர்ந்து சேமிப்பதால் பணம் பன்மடங்காக பெருகும் வாய்ப்பு கிடைக்கிறது. பொருத்தமான முதலீட்டு திட்டத்தைத் தேர்வு செய்வது பலன் கொடுக்கும். அதற்கு பரஸ்பர நிதியம் சிறந்த தேர்வாக இருக்கும்.

3 /9

கூட்டு வட்டியின் பலன்: பரஸ்பரம் நிதியத்தில் நல்ல வருமானம் கிடைப்பதோடு, அதில் கூட்டு வட்டியின் பலன் கிடைப்பதன் காரணமாக, நீண்டகால முதலீடுகளில், வியக்கத்தக்க வகையில், ரிட்டர்ன் கிடைக்கின்றன. இதனால், ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிதாகிறது.  

4 /9

ஓய்வூதியத் திட்டமிடல்: ரூ. 2 கோடி உருவாக்க, பரஸ்பர நிதியத்தில் மாதாந்திர முதலீடு ரூ. 5,000 என்ற அளவில் தொடங்கிய நிலையில், ஆண்டு வருமானம் 12 சதவீதம் என எடுத்துக் கொண்டால் கிடைக்கும் ஓய்வூதிய நிதி என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.  

5 /9

10 ஆண்டுகளுக்கான முதலீடு: மாதாந்திர ரூ. 5,000 முதலீட்டில் 10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ. 6,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ. 5,20,179 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய கார்பஸ் ரூ. 11,20,179 ஆகவும் இருக்கும்.  

6 /9

20 ஆண்டுகளுக்கான முதலீடு: மாதாந்திர ரூ. 5,000 முதலீட்டில் 20 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.12,00,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.33,99,287 ஆகவும், 20 ஆண்டுகளில் மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.45,99,287 ஆகவும் இருக்கும்.

7 /9

33 ஆண்டுகளுக்கான முதலீடு: மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்தால் 33 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகை ரூ.19,80,000 ஆகவும், மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயங்கள் ரூ.1,98,78,124 ஆகவும், மதிப்பிடப்பட்ட ஓய்வூதிய நிதி ரூ.2,18,58,124 ஆகவும் இருக்கும்.  

8 /9

மாதந்தோறும் ரூ.5,000 முதலீட்டில் ரூ.2 கோடி ஓய்வூதிய நிதி இலக்கை அடைய இலக்கை அடைய தோராயமாக 33 ஆண்டுகள் ஆகும். நீங்கள் 20 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்களுக்கு 53 வயது ஆகும்போது, ​​ரூ.2 கோடி ஓய்வூதிய நிதி உருவாகியிருக்கும். 25 வயதில் தொடங்கினாலும், 58 வயதை அடையும் போது, ​​இந்த இலக்கை அடைவீர்கள்.  

9 /9

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.