Natural Drinks For Weight Loss : உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கும் கடினமானதாக இருக்கலாம். இதை ஈசியாக்க சில ஆரோக்கிய பானங்கள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?
Natural Drinks For Weight Loss : உடல் பருமனை குறைப்பது என்பது பலரால் கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இதை எளிதாக்க உடற்பயிற்சியுடன் சேர்த்து, சில ஹெல்தியான உணவுகளையும் எடுத்துக்கொள்வது நல்லது. இதில், ஒரு சில பானங்களை நாம் குடித்தால் அது தூங்கும் போதும் கொழுப்பை கரைத்து, எடையை குறைக்க வழிவகுக்கும். அப்படிப்பட்ட பானங்கள் என்ன தெரியுமா? இதோ விவரம்!
வைட்டமின் சி நிறைந்திருக்கும் எலுமிச்சை நீரை குடித்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். எலுமிச்சை நீர், வெதுவெதுப்பானதாக இருக்க வேண்டும். இது, செரிமானத்தை அதிகரிப்பதோடு, உடலை உறங்க செல்வதற்கு முன்பு டீ-டாக்ஸ் செய்ய உதவும்.
இலவங்கப்பட்டையில் ஆண்டிஆக்சிடன்ஸ் சத்துகள் இருக்கின்றன. இது, உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகரிப்பதோடு, இரத்த சர்க்கரை அளவையும் சீராக்குகிறது. இதனை உறங்க செல்வதற்கு முன்பு குடித்தால், கொழுப்பை கரைக்க உதவும்.
Chamomile தேனீர், மன அழுத்தத்தை குறைத்து, உறக்கத்தை அதிகரிக்கும். இது உடலை ரிலாக்ஸ் செய்து, கொழுப்பை சேர்க்கும் ஹார்மோன்களை சமமாக்குகிறது. மெட்டபாலிசத்தை இது அதிகரிப்பதால், உறங்கும் போது கொழுப்பு குறையும் என்று கூறப்படுகிறது.
ஓமம் தண்ணீர், உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும். மேலும், செரிமானத்தை சீராக்குவதோடு உடல் உப்பசம் ஆகுவதையும் தடுக்கிறது. இதை உறங்க செல்வதற்கு முன்பு குடிப்பதால், உடலில் இருக்கும் கொழுப்பும் குறையுமாம்.
உடல் கொழுப்பை உடைக்க பெயர் பெற்ற ஒன்று, வெந்தைய நீர். ஊற வைத்த வெந்தைய நீரை குடிப்பதால், செரிமானம் அதிகரிக்கும், உடல் எடையும் இயற்கையாக குறையும்.
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. எனவே, வெதுவெதுப்பான பாலில் இரவு உறங்கும் முன்பு மஞ்சள் கலந்து குடிப்பதால், அது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கொழுப்பையும் குறைக்குமாம்.
கற்றாழை சாறு, உடலில் இருக்கும் அழுக்கை டீடாக்ஸ் செய்யும் பானமாகவும் இருக்கிறது. இதனை, இரவு நேரத்தில் உறங்க செல்லும் முன்பு குடிப்பதால், மெட்டபாலிசத்தின் வேகம் அதிகரிக்குமாம். மேலும், கொழுப்பை உடைத்து செரிமானத்தையும் சீராக்கும். இதனால், சருமத்திற்கும் நன்மை உண்டு என்று கூறப்படுகிறது. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)