சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புது தொகுப்பாளர்! பிரியங்காவிற்கு பதில் இவரா?

New Host For Super Singer Junior 10 Replacing Priyanka : விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியாக இருக்கிறது சூப்பர் சிங்கர். இதில் லேட்டஸ்ட் எபிசோடில் பிரியங்காவிற்கு பதில் இன்னொரு சீரியல் நடிகை ஹோஸ்டாக வருகிறார். அவர் யார் தெரியுமா?

New Host For Super Singer Junior 10 Replacing Priyanka : மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று சூப்பர் சிங்கர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் ஹைலைட்டே, தொகுப்பாளர்களாக இருக்கும் மா.க.பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டேதான். பிரியங்காவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த நிலையில், அவருக்கு பதிலாக சமீபத்திய எபிசோடில் வேறு ஒருவர் ஹோஸ்ட் ஆக வந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?

1 /7

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அதிகமாக பார்ப்பவர்களுக்கு, தொகுப்பாளர் பிரியங்காவை தெரியாமல் இருக்காது. தமிழ் நாட்டில் மிக பிரபலமான முகங்களுள் இவரும் ஒருவர்.

2 /7

பிரியங்கா, விஜய் தொலைக்காட்சியின் நட்சத்திர தொகுப்பாளர்களுள் ஒருவர். தனது நகைச்சுவை திறமையாலும், டைமிங் கவுண்டர்களாலும் பலரை சிரிக்க வைத்திருக்கிறார்.

3 /7

பிரியங்காவும் மாகபா ஆனந்தும் நெருங்கிய நண்பர்கள். சூப்பர் சிங்கர் மட்டுமல்லாமல், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர்கள் ஒன்றாக தொகுத்து வழங்கி இருக்கின்றனர்.

4 /7

பிரியங்காவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இவர், டிஜே-வான வசி சச்சி என்பவரை கரம் பிடித்திருக்கிறார். திருமணம் முடிந்த பின்பு, பிரியங்கா விடுமுறையில் இருப்பதால் இவர் தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வேறு ஒருவர் புது ஹோஸ்டாக மாறியிருக்கிறர்.

5 /7

பிரியங்கா மீண்டும் வரும் வரை அவர் இந்த நிகழ்ச்சியை மாகபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கலாம் என கூறப்படுகிறது. 

6 /7

அந்த ஹோஸ்ட் வேறு யாருமில்லை, சீரியல் நடிகை லக்‌ஷ்மி பிரியாதான். சமீபத்தில் சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 நிகழ்ச்சியின் ப்ரமோ வெளியானது. இதில் அவர் சர்ப்ரைஸான புது ஹோஸ்டாக வந்திருந்தார்.

7 /7

மக்களை கவர்ந்த மகாநதி சீரியலின் ஹீரோயின், லக்‌ஷ்மி பிரியா. இவரை புது நிகழ்ச்சியில் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.