இந்த தவறை செய்தால் புதிய ரேஷன் கார்டு கிடைக்காது..!

Published: Apr 26, 2025, 10:41 AM IST|Updated: Apr 27, 2025, 11:51 AM IST

New Ration Card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது செய்யக்கூடாத தவறுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

 

New Ration Card : புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும்போது இந்த ஒரு தவறை செய்தால் நிச்சயமாக உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காது.

1/9

புதிய ரேஷன் கார்டு (New Ration Card) கேட்டு தினமும் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாடு முழுவதும் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக புதுமண தம்பதிகள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.

2/9

அவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போத செய்யக்கூடிய தவறுகளால் சிலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விண்ணப்ப நிராகரிப்பை எதிர்கொள்கின்றனர். அண்மையில், புதிய ரேஷன் கார்டுக்கு புதிதாக திருமணமான ஒருவர் விண்ணப்பித்தார். 

3/9

அவர், புதிதாக தாங்கள் கட்டிய வீட்டு முகவரியில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தார். அதிகாரி விண்ணப்பத்தின்போது சமர்பிக்கபட்ட ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது பெற்றோருடைய ரேஷன் கார்டு எந்த முகவரியில் இருக்கிறது என கேட்டார். 

4/9

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் விற்ற வீட்டின் முகவரியிலேயே பெற்றோரின் ரேஷன் கார்டு இன்னும் இருப்பது தெரிய வந்தது. இதனை கண்டுபிடித்த அதிகாரி, முதலில் பெற்றோரின் ரேஷன் கார்டு முகவரியை மாற்றுமாறு அறிவுறுத்தினார்.

5/9

அத்துடன் அந்த ரேஷன் கார்டுலேயே விண்ணப்பதாரரின் பெயரையும் சேர்த்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தினார். அதனால் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த அந்த நபரின் விண்ணப்பம் நிராகரிப்பட்டது.

6/9

இதைப்போல் யாரேனும் சிக்கல்கள் இருப்பவர்கள் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்து இருந்தால் உங்களின் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

7/9

அதேபோல் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பபிப்பவர்கள் இப்படியான சிக்கல் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். ஒருவேளை வாடகை வீட்டில் குடியிருப்பவர்களாக இருந்தால் அந்த முகவரி, வீட்டுவரி ரசீது, மின் கட்டண பில் ஆகியவற்றைக் கொடுத்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

8/9

ஆனால், ஒரே முகவரியில், ஒரே கதவு எண் கொண்ட விண்ணப்பங்களுக்கு நிச்சயமாக இரண்டு ரேஷன் கார்டுகளை தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல்துறை வழங்காது. 

 

9/9

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகளில் இருக்கும் முகவரிகளை மட்டும் முழுமையாக ஆய்வு செய்தால் பல ஆயிரம் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் பல ஆண்டுகளுக்கு முன்பு வசித்த இடத்தை வைத்து ரேஷன் கார்டு பெற்றவர்கள் பல லட்சக்கணக்கானோர் இருக்கின்றனர்.