போக்குவரத்து விதிகளை மீறினால்?.. லைசன்ஸ் ரத்து? வந்த புது ரூல்ஸ்!

போக்குவரத்து தொடர்பாக புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. 

1 /6

போக்குவரத்து விதி மீறல்களை குறைக்கும் விதமாக, ஓட்டுநர் உரிமங்களுக்கு நெகட்டிவ் பாய்ண்ட்ஸ் அடிப்படையிலான முறையை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. 

2 /6

இது வேகம், சிவப்பு விளக்கை தாண்டுதல் உள்ளிட்ட விதிமீறகளை தடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. 

3 /6

விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமத்தை இடைநிறுத்தம் அல்லது ரத்து செய்யப்படும். புதிய அமைப்பின் கீழ், ஓட்டுநர்கள் ஒவ்வொரு விதிமீறகளுக்கும் அபராத புள்ளிகளை பெறுவார்கள். 

4 /6

அப்படி 12 புள்ளிகளை ஒருவர் அபராதமாக பெறும்போது, அவர் ஓராண்டு ஓட்டுநர் உரிம இடைநீக்கத்தை எதிர்கொள்ள நேரிடும். 

5 /6

மீண்டும் மீண்டும் விதிகளை மீறுபவர்கள் 5 ஆண்டுகள் வரை தகுதி நீக்கம் செய்யப்படலாம். இந்த விதிமுறைகள் இரண்டு மாதங்களுக்குள் சட்டமாக உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /6

மேலும், ஏஐ போன்ற நவீன தொழில்நுட்பங்களும் போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.