Aadhaar : ஆதாரை இனி ஜெராக்ஸ் எடுக்க வேண்டாம் என ஆதார் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏன் தெரியுமா?
Aadhaar : ஆதார் கார்டை இனி ஏன் ஜெராக்ஸ் எடுக்க தேவையில்லை என்பதற்கான முக்கிய காரணத்தை இங்கே பார்க்கலாம்.
1/8நீண்ட காலமாக, நம்முடைய அடையாளத்தை நிரூபிக்க, ஆதார் அட்டையின் ஜெராக்ஸை பல இடங்களில் கொடுத்து வந்தோம். இதனால் அந்தக் ஜெராக்ஸ் பேப்பரை வைத்து யாரேனும் அதைத் தவறாகப் பயன்படுத்த நிறைய வாய்ப்பு இருந்தது.
2/8இனி அப்படி நடக்காமல் இருக்க புதிதாக ஆதார் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் பேங்க், சிம் கார்டு கம்பெனிகள் அல்லது கவர்மென்ட் ஆபீஸ்களில் உங்கள் ஐடியை நிரூபிக்க, ஆதார் கார்டு ஜெராக்ஸுக்காக ஓட வேண்டியதில்லை.
3/8உங்கள் மொபைலில் இருக்கும் ஆப் மூலமாகவே நேரடியாக உங்கள் அடையாளத்தை வெரிபை செய்து கொள்ளலாம். இந்த ஆப் மூலம் உங்கள் ஆதார் டீடெய்ல்ஸை யாருக்காவது ஷேர் பண்ணும்போது, அது ரொம்பவே பாதுகாப்பான என்கிரிப்ட் முறையில் அனுப்பப்படும்.
4/8சில இடங்களில் உங்கள் முழு ஆதார் நம்பரையும் கொடுக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, கடைசி நான்கு இலக்கங்கள் மட்டும் தெரியும் ஒரு டாக்குமெண்ட்டை உருவாக்கவும், ஷேர் பண்ணவும் இந்த ஆப் உங்களை அனுமதிக்கும். இதனால் உங்கள் பர்சனல் டீடெய்ல்ஸ் பாதுகாப்பாக இருக்கும்.
5/8உங்கள் கைரேகை மற்றும் கண் ஸ்கேனிங் போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தைத் தற்காலிகமாக லாக் செய்து வைக்கும் வசதியும் உள்ளது. இதனால் உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் இதை யூஸ் பண்ண முடியாது.
6/8ஆவணத்தைத் தொலைத்து விடுவோம் என்ற பயமே இல்லை, ஏனெனில் அது உங்கள் ஸ்மார்ட்போனில் பாதுகாப்பாக இருக்கிறது. ஆதாரில் முகவரி, மொபைல் நம்பர் போன்ற ஏதேனும் அப்டேட்ஸ் செய்ய வேண்டுமென்றால் கூட, அதற்கான ரிக்வஸ்ட்டை இந்த ஆப் மூலமாகவே நீங்கள் கொடுக்கலாம்.
7/8இனி உங்கள் ஆதார் டீடெய்ல்ஸ், உங்கள் கையிலிருக்கும் ஸ்மார்ட்போனில் ரொம்பவே செக்யூர்டாக இருக்கும். எங்கும் எதற்கும் ஆதார் காப்பியைத் தேடவோ, ஜெராக்ஸ் கடைக்குப் போகவோ வேண்டாம்.
8/8மொபைலை எடுங்கள், ஆப்பை ஓப்பன் பண்ணுங்கள், தேவைப்படும் டீடெய்ல்ஸை மட்டும் பாதுகாப்பாக ஷேர் செய்து வேலையை நொடியில் முடித்திடுங்கள்.