சச்சின், கோலி இல்லை... லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த இந்தியர்களின் லிஸ்ட்!

Written ByR Balaji
Published: Jul 09, 2025, 08:42 PM IST|Updated: Jul 09, 2025, 08:42 PM IST

இங்கிலாந்து - இந்தியா 3வது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 10) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில், இந்த மைதானத்தில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம். 

வினோ மன்கட் (1952)1/10

வினோ மன்கட் (1952)

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்காக முதல் முறையாக சதம் அடித்தவர் வினோ மன்க்ட். இவர் 1952ஆம் ஆண்டு இந்த சாதனையை படைத்தார். ஆப்போட்டியில் அவர் 184 ரன்கள் எடுத்தார். 

குண்டப்பா விஸ்வநாத் (1979)2/10

குண்டப்பா விஸ்வநாத் (1979)

1952ஆம் ஆண்டு வினோ மன்கட் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசிய பிறகு 1979ஆம் ஆண்டு குண்டப்பா விஸ்வநாத் தான் சதம் விளாசினார். இவர் 113 ரன்கள் எடுத்து லார்ட்ஸ் மைதானத்தில் சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். 

திலீப் வெங்சர்க்கார் 1979, 1982, 1986*3/10

திலீப் வெங்சர்க்கார் 1979, 1982, 1986*

திலீப் வெங்சர்க்கார் 1979ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்து இந்த பட்டியலில் இணைந்தார். அதன் பின்னர் 1982 மற்றும் 1986ஆம் ஆண்டு சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில், மூன்று சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார். 

ரவி சாஸ்திரி (1990)4/10

ரவி சாஸ்திரி (1990)

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி 1990ஆம் ஆண்டு லார்ட்ஸில் சதம் அடித்து இந்த பட்டியலில் இணைந்தார். 

முகமது அசாருதீன் (1990)5/10

முகமது அசாருதீன் (1990)

முகமது அசாருதீன் 1990ஆம் அண்டு ரவிசாஸ்திரிக்கு பின்னர் சதம் அடித்து இந்த சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். அந்த டெஸ்ட் போட்டியில் அவர் 121 ரன்களை எடுத்திருந்தார். 

சவுரவ் கங்குலி (1996)6/10

சவுரவ் கங்குலி (1996)

டெஸ்ட் அறிமுகத்திலேயே சவுரவ் கங்குலி சதம் அடித்து தனது வருகையை அறிவித்தார். அதிலும் லார்ட்ஸ் மைதானத்தில் 131 ரன்கள் அடித்து இந்த சாதனை பட்டியலில் இடம் பிடித்தார். 

அஜித் அகர்கர் (2002)*7/10

அஜித் அகர்கர் (2002)*

பந்து வீச்சாளரான அஜித் அகர்கர் இந்த பட்டியலில் இணைந்தது அனைவருக்குமே அச்சரியம்தான். அவர் 2002ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடந்த டெஸ்ட் போட்டியில் 109 ரன்களை அடித்து இந்த சாதனை பட்டியலில் இணைந்தார். 

ராகுல் டிராவிட் (2011)*8/10

ராகுல் டிராவிட் (2011)*

தி வால் என அழைக்கப்படும் ராகு டிராவிட் 2011ஆம் ஆண்டு இந்த பட்டியலில் இணைந்தார். அவர் அப்போட்டியில் 103 ரன்கள் அடித்திருந்தார். 

அஜிங்க்யா ரஹானே (2014)9/10

அஜிங்க்யா ரஹானே (2014)

டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடக்கூடிய, ரஹானே இந்த சாதனை பட்டியலில் 2014ஆம் ஆண்டு இணைந்தார். அவர் அப்போட்டியில் 103 ரன்கள் அடித்திருந்தார். 

கே.எல். ராகுல் (2021)10/10

கே.எல். ராகுல் (2021)

2014ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த சாதனை பட்டியலில் இணைந்த வீரர் கே. எல். ராகுல்தான். அவர் 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 129 ரன்களை அடித்தார்.