கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... தினம் 2 ஏலக்காய் செய்யும் மாயங்கள் பல

உணவிற்கு நறுமணத்தையும் சுவையையும் கொடுக்க பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. இனிப்பு வகை உணவுகளுக்கு அத்தியாவசியமானது. அதோடு குருமா போன்ற காரவகை உணவுகளுக்கும், சுவையைக் கொடுக்க மிகவும் அவசியம்.

ஏலக்காயின் நறுமணம் உணவிற்கு தனிப்பட்ட சுவையை அளிப்பது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நலன்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.

1 /8

ஏலக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்களில், வைட்டமின் சி, நியாஸின், மெக்னீசியம், ரிபோபிளேவின் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அடக்கம். எனவே இது இதய ஆரோக்கியம் முதல் நுரையீரல் ஆரோக்கியம் வரை, பல பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கிறது.

2 /8

நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஏலக்காய் பெரிதும் உதவும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பொட்டாசியம் இதனை சாத்தியமாக்குகிறது. சாப்பிட்ட பின் ஏலக்காயை மெல்வது, பலன் அளிக்கும்.

3 /8

நுரையீரலுக்கு ஆக்ஸிஜனை அதிகம் வழங்கி உதவும் சிறந்த அரோமா சிகிச்சைக்கு, ஏலக்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சுவாச பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கும் நுரையீரல் பாதையில் ஏற்படும் வீக்கத்தை பூக்க ஏலக்காய் உதவுகிறது.  

4 /8

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு, ஏலக்காய் என்னும் மசாலா மிகவும் உதவியாக இருக்கும். சாப்பிட்ட பின் ஏலக்காயை மென்று சாப்பிடுவதால், மெட்டபாலிசம் அதிகரித்து, உணவு ஜீரணமாகி உடல் பருமன் குறைய பெரிதும் உதவும்.

5 /8

இதய நோய்களுக்கு காரணமாக இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க ஏலக்காய் உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை சீராக பராமரித்து மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை தடுக்கிறது.

6 /8

செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற சாப்பிட்டபின் இரண்டு ஏலக்காயை வெல்லலாம். குமட்டல், வாயு பிரச்சனை, வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வை அளிக்கும் திறன் ஏலக்காய்க்கு உண்டு.

7 /8

புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்கும் செல்களை அழிக்கும் ஆற்றல் பெற்ற சேர்மங்கள் ஏலக்காயில் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள், கட்டிகளை அழிக்க உதவும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் புற்றுநோய் அபாயமும் குறையும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.