கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... வாழ வைக்கும் வாழைத் தண்டு

Benefits of Banana Stem: வாழைமரத்தின் நடுத்தண்டு பகுதியான வாழைத்தண்டு வியக்கத்த ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் அற்புத காய்கறி. நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த வாழைத்தண்டில் கலோரிகள் மிகவும் குறைவு. ஆனால் விட்டமின்களும் மினரல்களும் அதிகம்.

வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் வாழைக்காய், வாழைப்பழம், வாழைப்பூ, வாழைத் தண்டு என அனைத்துமே, உடல் ஆரோக்கியத்திற்கு பலனளிக்கக் கூடியது.  இதனை வழக்கமாக சாப்பிட்டு வந்தால், பெரும் பலன் பெறலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

1 /9

வாழைத்தண்டு: நீர் சத்து மட்டுமட்டுமல்லாது எண்ணற்ற ஊட்டசத்துக்கள் வாழைத் தண்டில் உள்ளன. இதில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, மெக்னீசியம், தாமிரசத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் என அத்தியாவசிய சத்துக்கள் பல நிறைந்திருக்கின்றன.

2 /9

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்து சிறந்த காய்: வாழைத் தண்டில் உள்ள நார்சத்தும் நீர் சத்தும் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்தும் என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.  

3 /9

சிறுநீரக கற்களை உடைக்கும்: வாழைத் தண்டுகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் சிறுநீரக கற்களை உடைத்து வெள்யேற்றுவதோடு வராமலும் தடுக்கின்றன.

4 /9

செரிமான ஆரோக்கியம்: வாழைத் தண்டு நார்ச்சத்து நிறைந்தது என்பதால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை அதிகரிக்கவும் உதவும்.

5 /9

இதய ஆரோக்கியம்: வாழைத் தண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

6 /9

உயர் இரத்த அழுத்தம்: வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக்கி கட்டுப்படுத்துகிறது. இதனால் பக்கவாதம் மாரடைப்பு போன்ற ஆபத்துக்களும் தடுக்கப்படும். 

7 /9

உடல் பருமன்: வாழைத் தண்டு கலோரிகளில் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது எடை இழப்பு உணவில் ஒரு சத்தான கூடுதலாக அமைகிறது.  

8 /9

இளமை: வாழைத்தண்டில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் ஆரோக்கியமான சரும சுருக்கங்களின் குறைக்கவும், இளமையை காக்கவும் உதவும்.  

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.