மூளை ஆற்றல் முதல் வலுவான எலும்புகள் வரை.... வாழைக்காயை குறைத்து மதிப்பிடாதீங்க

Raw Banana: நாம் பொதுவாக வாழைப்பழத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வாழைக்காய்க்கு கொடுப்பதில்லை. வாழைப்பழம் போலவே, வாழை காயும் எண்ணற்ற ஆரோக்கிய உங்களை அள்ளிக் கொடுக்கக் கூடியது.

வாழைக்காய் அதிகம் சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று என்ற தவறான எண்ணம் கூட பலருக்கு உண்டு. ஓகே நலன்கள் அதிகம் கொண்ட காய்கறிகள் என்றால், நமக்கு நினைவில் வருவது பாகற்காய் வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகள் தான். ஆனால் வாழைக்காய் எந்த வகையிலும் சற்றும் குறையாது, தசைகள் முதல் ஆரோக்கியம் வரை பல வகைகளில், வாழைக்காய் ஆரோக்கிய நலன்களை அள்ளிக் கொடுக்கும்.

 

1 /9

வாழைக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நார் சத்துடன், வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி உள்ளிட்ட விட்டமின்களுடன், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. 

2 /9

மூளை ஆரோக்கியம்: வாழைக்காயில் செரடோனின் என்னும் மகிழ்ச்சி உணர்வை கொடுக்கும் ஹார்மோனை தூண்டும் ஆற்றல் கொண்ட வைட்டமின் பி6 உள்ளதால், மன அழுத்தம் நீங்கி மூளையின் செயல் திறன் மேம்படும்.

3 /9

குடல் ஆரோக்கியம்: வாழைக்காயில் உள்ள எண்ணற்ற நார்ச்சத்து மற்றும் பிரீ பையோட்டிக் பண்புகள், குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நல்ல பாக்டீரியாக்கள் பல்கி பெருக உதவுகின்றன.

4 /9

சர்க்கரை நோய்:  நீரழிவு நோயாளிகள் தாராளமாக சாப்பிடக்கூடிய பழங்களில் வாழைக்காய் அடங்கும் என்பது பலருக்கு தெரியாத உண்மை. இது இன்சுலின் உணர் திறனை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதனால் சுகர் லெவல் கட்டுக்குள் இருக்கும்.

5 /9

இதய ஆரோக்கியம்: வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலை எரித்து மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்கும் ஆற்றல் கொண்டது.  

6 /9

வலுவான எலும்புகள்: வாழைக்காயில் அதிகம் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம், அதன் பிரீபயோட்டிக் தன்மையால், உடலில் சிறப்பாக கிரகிக்கப்பட்டு, எலும்புகள் ஆரோக்கியம் மேம்படுவதோடு, மூட்டு வலி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன.

7 /9

உடல் பருமன்: வாழைக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது இது கொழுப்பை எரித்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவும். அதோடு இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மெட்டபாலிசத்தை தூண்டும் ஆற்றல் கொண்டவை.

8 /9

நோய் எதிர்ப்பு சக்தி: வாழைக்காயில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி சளி காய்ச்சல் முதல், பருவ கால நோய்கள் தொற்று நோய்கள் ஆகியவை உடலை அண்டாமல் பாதுகாக்கிறது.

9 /9

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.