சீரகம் முதல் ஏலக்காய் வரை... நலம் தரும் மசாலாக்களின் மருத்துவ பண்புகள்

Published: Mar 28, 2025, 08:40 AM IST|Updated: Mar 28, 2025, 08:40 AM IST

Best Indian spices: இந்திய உணவு கலாச்சாரத்தில், நீக்கமர நிறைந்துள்ள உணவுகளில், மசாலா பொருட்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை உணவிற்கு நறுமணத்தையும் சுவையையும் கூட்ட இன்றியமையாதவை.

இந்திய மசாலா பொருட்களில் நிறைந்துள்ள மருத்துவ பண்புகள் ஏராளம். இவற்றை அளவோடு சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகளை அடையலாம். இந்திய உணவுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மசாலாக்களையும் அவற்றின் மருத்துவ குணங்களையும் அறிந்து இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

Best Indian spices1/10

மசாலாக்கள்

உணவில் மசாலா பொருட்கள் சேர்ப்பதால், உணவிற்கு சுவை, நிறம், மனம் ஆகியவை கிடைப்பதோடு, இவற்றில் நிறைந்துள்ள சேர்மங்கள், உமிழ்நீர் மற்றும் அமில சுரப்பை தூண்டி, எண்ணற்ற பயன்களை கொடுக்கிறது. மேலும் இவற்றில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும், அழற்சி எதிர்ப்பு பண்புகளும், ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் நிறைந்துள்ளன.

Cumin Seeds2/10

சீரகம்

சீரகம் என்றாலே அகத்தை சீர்படுத்துதல் என்பதாகும். ஜீரணத்தை மேம்படுத்தும் திறன் கொண்ட சீரகம், உணவிற்கு நறுமணத்தை கொடுப்பதோடு, மெட்டபாலிசத்தை அதிகரித்து உடல் கொழுப்பு கரைய உதவுகிறது. செரிமானத்தை தூண்டும் சீரகம், நோயற்ற வாழ்வு வாழ பெரிதும் உதவும்.

Coriander seeds3/10

தனியா

தனியா என்னும் கொத்தமல்லி விதை, அன்றாட சமையல் பயன்படுத்தப்படும் மிக முக்கிய மசாலா. செரிமானத்தை தூண்டுவதோடு, வயிற்றுக் கோளாறுகள் அனைத்தையும் தீர்க்கும் ஆற்றல் கொண்டது. இவை ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கி டீடாக்ஸ் செய்யும் வல்லமை படைத்தது

Fenugreek4/10

வெந்தயம்

வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகளை ஒரு பட்டியலாகவே போடலாம். நீரிழிவு நோய்க்கான அருமருந்தாக இருப்பதோடு, செரிமான கோளாறுகள் அனைத்தையும் நீக்கவும் உதவுகிறது. பாலியல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு, வெந்தயம் கை கொடுக்கும்.

Carom Seeds5/10

ஓமம்

உடலில் உள்ள வாதம் கபம் ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஓமம், செரிமானத்தை மேம்படுத்தி சிறந்த உடற்கட்டை பெற உதவும். உணவு உண்டபின் சிறிதளவு இதை சாப்பிட்டாலே அஜீரணக் கோளாறுகள் எல்லாம் தீரும். சிறுநீரகம் மற்றும் சுவாச உறுப்புகள் சிறப்பாக செயல்படவும் ஓமம் உதவும்.

Pepper6/10

கருமிளகு

கருமிளகின் நன்மையை ஒரு பட்டியலே போடலாம். பத்து கரு மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம் என்ற பழமொழி மூலம், மருத்துவ குணங்களை புரிந்து கொள்ளலாம். சாதாரண சளி ஜலதோஷம் முதல் பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு, மிளகு கஷாயம் சிறந்த தீர்வை தருகிறது.

Cinnamon7/10

இலவங்கப்பட்டை

பிரியாணி குருமா போன்ற உணவு வகைகள், இலவங்கப்பட்டை இல்லை என்றால் ருசிக்காது. இது மெட்டபாலிசத்தை தூண்டி கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு கபம் மற்றும் வாதத்தை கட்டுக்குள் வைக்கும்.

Cardomom8/10

ஏலக்காய்

ஏலக்காய் இல்லாமல் இனிப்பு வகைகள், பாயசம் சர்க்கரை பொங்கல் ஆகியவை ருசிக்காது எனலாம். வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

Ginger9/10

இஞ்சி

இஞ்சி அஜீரணத்தைப் போக்கும் அருமருந்து. அதோடு நுரையீரலில் சேர்ந்து இருக்கும் அழுக்கை அகற்றி வலுப்படுத்தும் ஆற்றலையும் கொண்டது. வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பையும் கரைக்கிறது.

Disclaimer10/10

பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.