Old Pension Scheme: தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி விரைவில் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தான் அமலில் உள்ளது. மத்திய அரசு கடந்த 2023ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து இந்த பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஆனால் இந்த திட்டத்தில் பல குறள்படிகள் இருப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பல மாநிலங்களில் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தாலும், தமிழகத்தில் இந்த பிரச்சனை பெரிதானது. அதே சமயம் தேர்தல் நெருங்குவதால், இந்த ஆண்டுக்குள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஊழியர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அரசு சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ககந்தீப் சிங் பேடி தலையிலான குழு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் பிறகு, பழைய ஓய்வூதியம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகலாம் என்றும், செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில், அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிச்சம் அமல்படுத்துவார் என கூறப்படுகிறது.