Old Pension Scheme Latest Update: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழையர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் தற்போது புதிய ஓய்வூட்திய திட்டமே செயல்பாட்டில் உள்ளது. இது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஓய்வு பெற்றவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது.
இதன் காரணமாக புதிய ஓய்வுதிய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இச்சூழலில் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தனர். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் ஆன நிலையில், இன்னும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை.
முன்னதாக பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே பழைய ஓய்வூதியம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் குறித்தான அறிவிப்பு ஏதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் அரசு ஊழியர் சங்கங்களுடன் முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், செப்டம்பரில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறி இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்ற்பது பொய்யான ஒன்று. அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் பலவற்றை நிறைவேற்றி உள்ளார். பழைய ஓய்வூதியம் குறித்தும் அறிவிப்பை முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.