Old Pension Scheme: தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
1/7தமிழ்நாட்டில், கடந்த 2004ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பெண்ஷன் திட்டத்தை அமல்படுத்தினர்.
2/7இதனைத்தொடர்ந்து புதிய ஓய்வூதிய திட்டத்தினால் பெரிய பலன்கள் ஏதும் கிடைக்கவில்லை, இதனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
3/7கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இத்திட்டம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது. அக்குழு அரசு ஊழியர் சங்கங்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
4/7இந்த சூழலில் விரையில் இது தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் செப்டம்பர் இறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
5/7இந்த நிலையில், தமிழக அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயலாளர் மயில், பழைய ஓய்வூதிய திட்டம்தான் வேண்டும். வேறு எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.
6/7இது தொடர்பாக பேசிய அவர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக அரசு கொடுத்த எந்த வாக்குறிதியையும் நிறைவேற்றவில்லை. இதற்காக போராட்டங்களை நடத்தி வருகிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.
7/7இத்திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருக்கும் குழுவிடம் இருந்து அரசு அறிக்கை பெற்று, திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக எந்த திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.