Anora Movie OTT Release India: சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், அனோரா திரைப்படத்திற்கு 5 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. இந்த படத்தை, எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் தெரியுமா?
Anora Movie OTT Release India: உலக சினிமாவின் உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, சமீபத்தில் நடைப்பெற்றது. இதில், ஹாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், அனோரா என்ற திரைப்படத்திற்கு மட்டும் 5 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளது. இது குறித்து இந்தியர்கள் பலரும் கூட தேடி வருகின்றனர். இந்த படத்தை, எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? அது குறித்த விவரம் இங்கே.
2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான படம், அனோரா. இந்த படத்தில் மிக்கி மேடிசன் ஹீரோயினாக நடித்திருந்தார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருதுகள் விழாவில் இந்த படம், 5 விருதுகளை அள்ளியது. சிறந்த நடிகைக்கான விருதை மிக்கி மேடிசன் பெற்றார். சிறந்த இயக்குநருக்கான விருது இதனை இயக்கிய ஷான் பேக்கருக்கு கிடைத்தது. அதே போல, சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு ஆகிய விருதுகளும் இந்த படத்திற்கு கிடைத்தது.
அனோரா படம், ஆஸ்கர் விருதுகளை பெறுவதற்கு முன்னரே 77வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. திரையரங்குகளில் வெளியான போது கிட்டத்தட்ட 41 மில்லியன் அமெரிக்க டாலர்களை உலகளவில் கலெக்ட் செய்தது.
இந்த படம், ஒரு 23 வயது பெண் குறித்த கதையாகும். படிப்பதற்காக அமெரிக்காவிற்கு செல்லும் ஒரு பெண், ரஷ்ஷிய தொழிலதிபரின் மகனை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது.
இந்த படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது ஆஸ்கர் விருதுகளையும் வென்றிருப்பதால் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அனோரா படத்தை இந்தியாவில் எப்போது ஓடிடியில் ரிலீஸாகிறது என்பது குறித்தும் ரசிகர்கள் தேடி வருகின்றனர். இந்த படம், ஏற்கனவே ஜீ 5 தளத்தில் ரெண்ட் ஆப்ஷனில் உள்ளது. இதனை இத்தளத்தில் ரூ.149 கொடுத்து பார்க்கலாம். இது இல்லாமல் இன்னொரு தளத்திலும் இந்த படத்தை பார்க்கலாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த படம் ரிலீஸாக இருக்கிறதாம். வரும் மார்ச் 17ஆம் தேதி இந்த படத்தை இத்தளத்தில் பார்க்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.