ஆஸ்கர் 2025: விருதுகளை தட்டிச்சென்ற பிரபலங்கள் யார்? முழு லிஸ்ட்!

Oscars 2025 Winners Full List : 97வது அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

Oscars 2025 Winners Full List : உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், உலக சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த முறை ஒரு இந்திய படமும் ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்வாகவில்லை. இருப்பினும், இந்திய சினிமா ரசிகர்களின் பார்வை இந்த விழாவின் மீது இருந்தது. இந்த விழாவில், எந்தெந்த பிரபலங்களுக்கு எந்த பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன என்பதை இங்கு பார்ப்போம். 

1 /9

சிறந்த படத்திற்கான விருது, அனோரா திரைப்படத்திற்கு கிடைத்தது. இது, ஒரு பாலியல் தொழிலாளி தனது வாழ்வில் என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கிறாள் என்பதை பற்றி எடுக்கப்பட்ட படமாகும். ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு உள்பட பல விருதுகளை இந்த படம் தட்டிச்சென்றது. 

2 /9

சிறந்த நடிகைக்கான விருது, மிகே மேடிசனுக்கு கிடைத்தது. அனோரா படத்திற்காக இவர் இந்த விருதினை பெற்றார்.

3 /9

சிறந்த நடிகருக்கான விருதை ஏட்ரியன் ப்ரோடி பெற்றார். தி ப்ரூட்டலிஸ்ட் திரைப்படத்திற்காக இவர் இந்த விருதினை வாங்கியிருந்தார்.

4 /9

சிறந்த இயக்குநருக்கான விருதை ஷான் பேக்கர் பெற்றார். இவர், அனோரா திரைப்படத்திற்காக இந்த விருதினை வாங்கினார்.

5 /9

சிறந்த துணை நடிகைக்கான விருது ஜோ சல்டானாவிற்கு கிடைத்தது. எமிலியா பெரெஸ் என்ற படத்திற்காக இவர் இந்த விருதினை வாங்கினார். அவதார் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் இவர்தான் என்பது கூடுதல் தகவல்.

6 /9

சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றவர் கெரியன் கல்கின். இவர், அ ரியல் பெய்ன் என்ற ஆங்கில படத்திற்காக இந்த விருதினை வாங்கினார்.

7 /9

சிறந்த தழுவப்பட்ட படத்திற்கான விருது, கான்க்லேவ் படத்திற்கு வழங்கப்பட்டது. இது ஒரு அரசியல் த்ரில்லர் படமாகும்.

8 /9

சிறந்த Animated Feature படத்திற்கான விருதை Flow திரைப்படம் பெற்றது.வாழ்க்கை, எப்போது வேண்டுமானாலும் சந்தோஷத்தில் இருந்து துக்கமாக மாறும். அதற்கு ஏற்றவாறு நாம் பழகிக்கொள்ள வேண்டும் எனும் கருத்தை சொன்ன படம் இது.

9 /9

சிறந்த ப்ரொடக்‌ஷன் டிசைன் மற்றும் காஸ்டியூம் டிசைனுக்கான விருதை Wicked படம் பெற்றது. சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் ஆகியவற்றுக்கான  விருதுகளை The Brutalist படம் பெற்றது. தி சப்ஸ்டான்ஸ் படத்திற்கு சிறந்த மேக்-அப் மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருது கிடைத்தது. சிறந்த ஒலி மற்றும் சிறந்த சிறந்த காட்சி விளைவுகள் விருதை Dune: PART 2 படம் பெற்றது.