கூலி to மீஷா-இந்த வார ஓடிடி ரிலீஸ்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

Written ByYuvashree
Published: Sep 08, 2025, 10:33 AM IST|Updated: Sep 08, 2025, 10:33 AM IST

OTT Release This Week : இந்த வாரம், சில புது படங்களும் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன. அவற்றில் எதை, எந்த தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

OTT Release This Week : ஓடிடி தளங்கள், பெரிதாக வளர ஆரம்பித்ததில் இருந்து பல புதுப்படங்களும் டிஜிட்டல் தளங்களில் ரிலீஸிற்கு பின்னர் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. வாரா வாரம், திரைப்படங்களும், வெப் தொடர்களும் நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம் வீடியோ, ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், இந்த வாரமும் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

Coolie1/7

கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம், கூலி. இந்த படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான், உப்பேந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம், வரும் செப்டம்பர் 11ஆம் தேதியன்று ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. 

Bakasura Restaurant2/7

பாகாசூரா ரெஸ்டாரண்ட்

பாகாசூரா ரெஸ்டாரன் படம் மலையாளத்தில் ப்ரைம் வீடியோவில், செப்டம்பர் 8 அன்று வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் சன் நெக்ஸ்டில் செப்டம்பர் 12 அன்று வெளியாகிறது. 

Meesha3/7

மீஷா

கதிர் நடிப்பில் வெளியான மீஷா படம் மலையாளம் மற்றும் தமிழில் செப்டம்பர் 12 அன்று வெளியாகிறது. 

Detective Ujjwallan 4/7

டிடக்டிவ் உஜ்வாலன்

டிடக்டிவ் உஜ்வைலன் படம், தமிழ் மற்றும் பிற மொழிகளில் லயன்ஸ் கேட் தளத்தில் செப்டம்பர் 12 அன்று வெளியாகிறது. 

Other Releases5/7

பிற ஓடிடி ரிலீஸ்கள்

செப்டம்பர் 9 அன்று, Su from So ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும், ஒன்லி மர்டர்ஸ் இன் தி பில்டிங் தொடரின் சீசன் 4 ஆங்கிலத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியாகிறது. ஹனி டோண்ட் திரைப்படம் ஆங்கிலத்தில் ப்ரைம் வீடியோவிலும், தாதமி ஆங்கில படம் ப்ரைம் வீடியோவிலும், கிஸ் ஆர் டை ஜப்பானிய தொடர் நெட்ஃப்ளிக்ஸிலும், வெப்பன்ஸ் படம் ப்ரைம் வீடியோவிலும் வெளியாகிறது. 

Other Releases6/7

பிற ஓடிடி ரிலீஸ்கள்

செப்டம்பர் 10: Seen and Heard ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. Aka சார்லீ ஷீன் நெட்ஃப்ளிக்ஸிலும், வென் ஃபாலீஸ் கம்மிங் படம் ப்ரைம் வீடியோவிலும், தி டெட் கேர்ள்ஸ் தொடர் நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியாகிறது. 

Other Language7/7

பிற மொழி ஓடிடி ரிலீஸ்

செப்டம்பர் 12 ஓடிடி ரிலீஸ்: 

ராம்போ இன் லவ்-ஜியோ ஹாட்ஸ்டார் தொடர்

Do You Wanna Parter-ப்ரைம் வீடியோ இந்தி தொடர்

தி ராங் பேரிஸ்-நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் ஆங்கில படம்

வார்ஃபேர்-ஹெச்பிஓ மேக்ஸ் ஆங்கில படம்

யூ அண்ட் எவ்ரிதிங் எல்ஸ் கொரியன் தொடர், நெட்ஃப்ளிக்ஸ்

ராடு ராடு குயின்ஸ்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர்.