OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் புத்தம் புது படங்கள், தொடர்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?

Written ByYuvashree
Published: Aug 04, 2025, 11:50 AM IST|Updated: Aug 04, 2025, 11:50 AM IST

OTT Releases This Week August 4th 2025 : இந்த வாரம், சில புதிய படங்களும் வெப் தொடர்களும் ஓடிடியில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.

OTT Releases This Week August 4th 2025 : ஓடிடி தளங்களின் வருகை பெருகிவிட்டதால், தியேட்டர்களில் வெளியாகும் புதுப்புது படங்களும் கூட வெகு சில நாட்களில் இல்லம் தேடி வர ஆரம்பித்து விட்டன. வாரா வாரம், நெட்ஃப்ளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், ப்ரைம் உள்ளிட்ட தளங்களில் படங்களும், வெப் தொடர்களும் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதையும், அவற்றை எந்தெந்த தளங்களில் பார்க்கலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.

Paranthu Po1/7

பறந்து போ

ராம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், பறந்து போ. குழந்தைகளை மையாமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த கதையில் சிவா, அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை, ஆகஸ்ட் 5 முதல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.

Oho Enthan Baby2/7

ஓஹோ எந்தன் பேபி

விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா நடித்திருக்கும் படம், ஓஹோ எந்தன் பேபி. இந்த படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஆகஸ்ட் 8 முதல் பார்க்கலாம். 

Maaman3/7

மாமன்

சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோரின் நடிப்பில் உருவான படம், மாமன். இந்த படத்தை ஜீ 5 தளத்தில் வரும் ஆகஸ்ட் 8 முதல் காணலாம். 

Prime Releases4/7

ப்ரைம் ரிலீஸ்

ஜுராசிக் வர்ல்ட் ரீ-பர்த், சாரி பேபி, ஆப்ரஹாம் பாய்ஸ் ஆகிய படங்களை ஆகஸ்ட் 5 முதல் அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று தி பிக் அப் படத்தை அதே தளத்தில் பார்க்கலாம். 

Netflix Release5/7

நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸ்

SEC Football: Any Given Saturday தொடரை ஆகஸ்ட் 5 அன்று நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். இதை தவிர, வெட்னஸ்டே சீசன் 2 தொடரை ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் ஆகஸ்ட் 6 அன்று நெட்ஃப்ளிக்ஸில் காணலாம். ஸ்டோலன் படத்தை ஆகஸ்ட் 8ஆம் தேதியும், லிஸா ஃப்ரேன்க்கிஸ்டைன் படத்தை ஆகஸ்ட் 9 அன்றும், ப்ளட் பிரதர்ஸ் படத்தை ஆகஸ்ட் 10 அன்றும் பார்க்கலாம். 

Amazon Prime6/7

அமேசான் ப்ரைம்

ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளில் அரபியா கடாலி எனும் படத்தை ப்ரைம் வீடியோவில் காணலாம். அதே தேதியில், ப்ரைமில் தி ஆக்குபெண்ட் ஆங்கில படத்தையும் காணலாம். 

Other OTT Release7/7

பிற ஓடிடி ரிலீஸ்

மாயாசபா படத்தை ஆகஸ்ட் 7 அன்று சோனி லிவ் தளத்திலும், மிக்கி மற்றும் லவ் ஹர்ட்ஸ் ஆகிய படங்களை ஜியோ ஹாட்ஸ்டாரிலும் பார்க்கலாம். 

மோதாவரி லவ் ஸ்டோரி வெப் தொடரை ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று ஜீ 5ல் பார்க்கலாம். ஹிபூலி கட் கன்னட படத்தை சன் நெக்ஸ்ட் தளத்திலும், ஃப்ரீக்கி டேல்ஸ் ஆங்கில படத்தை HBO Max தளத்திலும், வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று காணலாம்.