OTT Releases This Week October 17th 2025 : இந்த வாரம் என்னென்ன திரைப்படங்களும் தொடர்களும் ஓடிடியில் ரிலீஸாகிறது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
OTT Releases This Week October 17th 2025 : ஓடிடிக்களின் வருகை, கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து விட்டது. இதையடுத்து, பல புதுப்படங்களும் தொடர்களும், அடிக்கடி ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் வெளியாகும் ஓடிடி ரிலீஸ்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
அதர்வா நடித்த தணல் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் அக்.17ஆம் தேதியான இன்று முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.
வெற்றி நடித்திருக்கும் க்ரைம் த்ரில்லர் படம், முதல் பக்கம். இந்த படத்தில் தம்பி ராமையா, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஆஹா தமிழ் தளத்தில் பார்க்கலாம்.
கெத்து தினேஷ் நடித்திருக்கும் படம், தண்டகாரண்யம். இந்த படத்தை சிம்ப்ளி சவுத் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோவில் பார்க்கலாம்.
டியர் ஜீவா திரைப்படத்தை டெண்ட்கொட்டா தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி முதல் பார்க்கலாம்.
அபயந்தரா குட்டவல்லி மலையாள படத்தை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். யோலோ படத்தை டெண்ட்கொட்டா தளத்திலும், அவர் ஃபால்ட் படத்தை அமேசான் ப்ரைமிலும் பார்க்கலாம். கூடவே, பாகி 4 படத்தை அமேசான் ப்ரைமிலும், தையல் மிஷின் படத்தை டெண்ட்கொட்டா தளத்திலும் பார்க்கலாம். எலுமலே படத்தையும் ஜீ 5 தளத்தில் ப்ரீமியம் செலுத்தி பார்க்கலாம்.
பகவத் சேப்டர் 1-ஐ ஜீ 5 தளத்தில் ப்ரீமியம் செலுத்தி பார்க்கலாம். Andondittu Kaala படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் காணலாம்.
கிஷ்கிந்தபுரி படத்தை ஜீ 5 தளத்தில் பார்க்கலாம். கிரேட்டர் காலேஷ் படத்தை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.