Tiruchendur Temple: திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1/7தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் உள்ளன. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ளது. திருச்செந்தூரில் உள்ள முருகனை காண தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
2/7குறிப்பாக, முருகனுக்கான உகந்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சமீபத்தில் நடந்த கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் பத்து நாட்கள் திருச்செந்தூர் கோயில் மற்றும் கடற்கரைகளில் தங்கி, விரதம் இருந்து வந்தனர்.
3/7கந்த சஷ்டி நாள் மட்டுமில்லாமல், சாதாரணமான நாட்களிலும் முருகனை காண, கடற்கரையில் இரவு நேரங்களில் பக்தர்கள் தங்குவது வழக்கம். கடற்கரையில் இரவு நேரத்தில் தங்கி, மறுநாள் காலை கடற்கரையில் நீராடி சாமி தரிசனம் செய்தால் நல்லது என நம்பப்படுகிறது. இதனால், பக்தர்கள் இரவு நேரத்தில் கடற்கரையில் தங்கி வருகின்றனர்.
4/7இந்த நேரத்தில் அதிக திருட்டு சம்பவங்களும் அடிக்கடி நடப்பதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. குடும்பத்துடன் கடற்கரையில் வந்தவர்களின் மர்ம கும்பல் கொள்ளையில் ஈடுபடுவது தொடர்பாக புகார் எழுந்துள்ளது. இதனால், திருச்செந்தூர் போலீசாரும், கோயில் நிர்வாகமும் இரவு நேரத்தில் பக்தர்கள் கடற்கரையில் தங்குவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
5/7அதன் அடிப்படையில், முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, இனி வரும் நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
6/7நேற்று (நவம்பர் 7) இரவு கடற்கரையில் தங்கி இருந்த பக்தர்களை ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை வழங்கி கோயில் நிர்வாகம் அவர்களை அப்புறுத்தியுள்ளது. எனவே, வரும் நாட்களில் திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது.
7/7அதே நேரத்தில், காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கடற்கரையில் பக்தர்கள் தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பகல் நேரங்களில் பக்தர்கள் தங்கி, கடற்கரையில் புனித நீராடலாம் எனவும் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.