பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அலர்ட்! டிசம்பர் 31 தான் கடைசி நாள்.. அப்புறம் ரூ.1000 அபராதம்!

Aadhaar Pan Card Link: பான் கார்டு - ஆதார் கார்டை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லையெனில் நீங்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ளலாம்.

 

Aadhaar Pan Card Link: எனவே, பான் கார்டு ஆதார் கார்டை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து இங்கு பார்ப்போம். 

 

1 /7

நாட்டு மக்களுக்கு ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளை பள்ளிக்கு சேர்ப்பது முதல் பணப் பரிவர்த்தனை வரை அனைத்திற்குமே ஆதார் மற்றும் பான் கார்டு முக்கிய ஆவணமாக இருக்கிறது.  இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பான் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் வருமான வரித்துறை கூறி வருகிறது.  

2 /7

குறிப்பாக, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் பான் கார்டை இணைக்க வேண்டும் என கூறி வருகிறது. பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால், பான் ஆதார் கார்டை இணைக்காதவர்கள் உடனே அதனை செய்ய வேண்டும்.   

3 /7

பான் கார்டை ஒருவர் ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. சம்பளம் வராது.   நிலுவையில் உள்ள பணத்தை திரும்பு பெற முடியாது. பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியாது. இப்படியான சிரமங்களை தவிர்க்க, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டை, ஆதாருடன் இணைக்க வேண்டும்.  

4 /7

ஆதார் பான் எண்ணுடன் இணைக்க உள்ளவர்கள் incometax.gov.in. என்ற இணையதளத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்கு முகப்பு பக்கத்தில் Link ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்க 10 இலக்கு பான் கார்டு எண்ணையும், 12 இலக்கு ஆதார் கார்டை எண்ணையும் உள்ளிட வேண்டும்.  அதன்பிறகு, உங்கள் ஆதாரில் உள்ள பெயரை உள்ளிட வேண்டும்.  

5 /7

இதனை அடுத்து, Validate என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு இதனை செய்தால் ரூ.1,000 செலுத்த வேண்டும். இந்த தொகை செலுத்திய பிறகே, ஆதார் பான் கார்டு இணைக்க வேண்டியிருக்கும். டெபிட் கார்டு/கிரெட்டிட் கார்டு/யுபிஐ போன்றவை மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும்  

6 /7

கட்டணம் செலுத்திய பிறகு, ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். இந்த ஒடிபி எண்ணை உள்ளிட்டு,  validate செய்தால், உங்கள் பான் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு விடும். இதன் பிறகு, ஒருமுறை உங்கள் பான் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு விட்டதா என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.  

7 /7

incometax.gov.in.  என்ற இணையதளத்திற்கு சென்று, முகப்பு பக்கத்தில் Link Aadhaar Status என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இதில் உங்களது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்ணை உள்ளிட்டு Click View Link Aadhaar Status என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டு இருக்கிறதா என்பது தெரிந்து கொள்ளலாம்.