சூரியனின் அருளால்... பங்குனி மாதத்தில் பட்டையை கிளப்ப போகும் 5 ராசிகள் இவைதான்

பங்குனி மாத பலன்கள்: தமிழ் மாதத்தின் கடைசி மாதமான பங்குனி மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஏனெனில் பங்குனியில் சனி பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. சனீஸ்வரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் போது பங்குனி மாதம் பிறக்கிறது. இதனால் பங்குனி மாதம் மீன மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் பங்குனி மாதத்தில் சூரியனின் அருளை பெற்று, வாழ்க்கையின் அனைத்து வளங்களையும் பெறப்போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.

1 /8

சூரியன் பெயர்ச்சியுடன் தொடங்கும் பங்குனி மாதத்தில், மிக முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சியுடன், புதனும் சூரியனும் இணைந்த புத - ஆதித்ய யோகமும், சூரியன் சுக்கிரன் இணைந்த சுக்கிர - ஆதித்ய யோகமும் உருவாகிறது. இவை இரண்டும் அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் யோகங்களாகும்.

2 /8

பங்குனி மாத கிரக பெயர்ச்சிகளும், அதனால் ஏற்படும் கிரக சேர்க்கைகளால் உருவாகும் யோகங்களாலும், குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்கள், பெரிதும் பலநடைவார்கள் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். வாழ்க்கையில் மகிழ்ச்சி சேமிப்பு என அனைத்தும் நிறைந்திருக்கும்.

3 /8

ரிஷப ராசியினருக்கு பங்குனி மாதம் லாபத்தை கொடுக்கும் மாதமாக இருக்கும். உறவுகள் மத்தியில் இணக்கம் இருக்கும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கிடைக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.

4 /8

மிதுன ராசியினருக்கு பங்குனி மாதம் மகிழ்ச்சியை கொடுக்கும் மாதமாக இருக்கும். மிகவும் எதிர்பார்த்த பதவி உயர்வு உயர்வு கிடைக்கலாம். கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் பொறுப்புகளுடன் வருமானமும் அதிகரிக்கும்.

5 /8

விருச்சிக ராசியினருக்கு பங்குனி மாதம் நல்ல செய்திகளை கொடுக்கும் மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு அனைத்து வகையிலும் சாதகமாக இருக்கும். பண வரவும் அதிர்ஷ்டமும் குறையாமல் இருக்கும். திட்டமிட்டபடி வேலைகள் நிறைவேறும்.

6 /8

தனுசு ராசியினருக்கு பங்குனி மாதத்தில் மகிழ்ச்சிக்கும் செல்வத்திற்கும் குறைவிருக்காது. புதிய வீடு வாங்கும் கனவு நிறைவேறலாம். திடீர் நிதி ஆதாயம் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். திட்டமிட்டபடி வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

7 /8

மகர ராசியினருக்கு பங்குனி மாதம் பண வரவையும் சந்தோஷத்தையும் கொடுக்கும் மாதமாக இருக்கும். வாழ்க்கையில் ஏற்படும் சில மாற்றங்கள், முன்னேறுவதற்கான வாய்ப்பை கொடுக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.