Kids Slipper: தற்போதெல்லாம் காலணிகளில் கூட பல மாடல்கள் வந்துவிட்டது. அது டிரண்டாகவும் மாறிவிட்டது. சிலர் உடுத்தும் உடையின் நிறத்திற்கு ஏற்றவாறு கூட காலணிகளை வைத்திருக்கிறார்கள். நாம் குழந்தைகளுக்கு கூட வித விதமான காலணிகளை வாங்கி கொடுகிறோம். ஆனால் கிராக்ஸ் மாடல் காலணியை சிறு வயது குழந்தைகள் அணிந்தால் பிரச்சனை ஏற்படும் என கூறப்படுகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
1/7children footwear: முந்தய காலத்தில் தினசரி பயன்பாட்டிற்காக அணியப்பட்ட காலணி, இன்று ஃபேஷன் ஆகிவிட்டது. அதிலும் இந்த கிராக்ஸ் (Crocs) மாடலை நாம் எங்கு சென்றாலும் பார்க்கமுடிகிறது. அந்த காலணி பார்ப்பதற்கு ஸ்டைலாகவும் அதிக வசதி காரணமாகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிராக்ஸ் காலணியை தேர்வு செய்ய தொடங்கிவிட்டனர். ஏன் 2 வயது குழந்தைகள் கூட கிராக்ஸை அணிகிறார்கள்.
2/7Parents Beware: ஆனால் 2 முதல் 4 வயது குழந்தைகள் இந்த கிராஸ் செருப்பை அணிவதால், சில பிரச்சனைகள் இருப்பதாக குழந்தை மருத்துவரும் நியோனாட்டாலஜிஸ்டுமான டாக்டர் அபிஷேக் சோப்ரா கூறுகிறார். அவர் கூறிய சில தகவல்கள் இங்கே.
3/7Parenting Tips: ஹர்ஸிந்தகி என்ற இணையத்தில் அவர் கூறியதாவது, கிராக்ஸ்களுக்கு வளவு ஆதரவு இல்லை. அதாவது பாதங்களின் வளைவு பகுதியை தாங்கும் திறன் குறைவாக இருக்கிறது. குழந்தைகளின் பாதங்கள் வளர்ச்சியடையக்கூடியது. அவர்களின் பாதங்கள் மற்றும் கணுக்கால் சரியாக வளர சரியான ஆதரவு தேவை.
4/7இது போன்ற செருப்புகள் குழந்தைகளுக்கு தட்டையான பாதங்கள் அல்லது கால் வலியை ஏற்படுத்தும். அதேபோல் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுகிறார்கள். தளர்வான காலணிகள் பெரும்பாலும் அவர்களின் கால்களில் இருந்து நழுவும். இது குழந்தைகள் விழவும் காயம் ஏற்படவும் மற்றும் முறுக்குதல் ஆபாயத்தை அதிகரிக்கிறது.
5/7Crocs Slipper: கிராக்ஸ் காலணியில் சரியான குஷன் தன்மை இல்லை. குழந்தைகள் அதனை நீண்ட நேரம் அணியும் பட்சத்தில் கால்களில் வலி ஏற்படலாம். மேலும், குழந்தைகளின் பாதங்கள் சரியாக வளர வசதியான காலணிகள் மட்டுமல்லாமல், உடல் எடையை சரியாக பகிர்ந்தளிக்கும் காலணிகளும் அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.
6/7அதேபோல், கிராக்ஸ் செருப்பின் புன்புறத்தியில் ஒரு பட்டை இருக்கும். இதனால் கால் விரல்களை வளைத்து உள்ளே வைத்திருக்கும் நிலை ஏற்படும். இதன் காரணமாக சோர்வு மற்றும் கால் பிரச்சனைகள் ஏற்படலாம். கோடை காலத்தில் பாதங்களில் வியர்வையை கிராக்ஸ் அதிகரிக்கிறது. இது பாக்டீரியா வளர்ச்சியின் ஆபாயத்தை அதிகரிக்கும்.
7/7எனவே, கிராக்ஸ் செருப்பை அணிய வேண்டாம் என கூறவில்லை. அதனை அவ்வப்போது அணிவதால் எந்த பிரச்சனையும் இல்லை. அதனை எங்கு சென்றாலும் அணிவதுதான் பிரச்சனை. அது நல்ல யோசனையும் அல்ல என அவர் கூறினார்.